சுவிஸ் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொடியேற்றம் 09.07.21

ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
சுவிற்சர்லாந்து சூரிச்சில்  அருள்பலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு சிவன் கோவில் வருடார்ந்த மகோற்சவம் 09.07.2021,அன்று வெள்ளிக்கிழமை  கொடியேற்றத்திருவிழா  பூசை வழிபாடுகளுடன் வெகுவிமர்சையாக மிகச்சிறப்பாக நடைபெற்றது 
தொடர்ந்து   16.07.2021 சப்பறத்திருவிழா
17.07.2021 தேர்த்திருவிழா
18.07.2021 தீர்த்தத்திருவிழா தற்போதுள்ள பேரிடர்காலத்தை 
முன்னிட்டு பூசை நேரங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.
அவனருளாலே  அவன் தாள் வணங்கி.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





 



இந்த விலங்குகளுக்கு உணவளித்தால் நம்முடைய தோஷம் நீங்குமாம்

 நம்முடைய முன்னோர்கள் பசுவிற்கு கீரை, பழங்கள் உள்ளிட்டவற்றை  கொடுத்தால் கொடுப்பதால், நாம் செய்த பாவங்கள் அழியும் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் எந்தெந்த விலங்குகளுக்கு நாம் உணவு அளித்தால் கிரகப் பிரச்சனைகள் தீரும் என்பதை இங்கு பார்ப்போம்.
சூரியன் :-
சூரிய பகவானின் கிரகப் பிரச்சனைகள் உங்கள் ஜாதகத்தில் இருந்தால், குதிரைக்கு உணவளிப்பதன் மூலம் அந்த பிரச்சனை தீரும்.
வியாழன் :-
உங்கள் ஜாதகத்தில் குருபகவானால் பிரச்சனைகள் இருந்தால் திருமணம் மற்றும் கல்வி பாதிக்கப்படும். அதை நிவர்த்தி செய்ய மாடுகளுக்கு தீவனம் அல்லது யானைக்கு உணவு அளிக்கலாம்.
சந்திரன் :-
சந்திர பகவானின் பார்வை உங்கள் ஜாதகத்தில் உக்கிரமாக இருந்தால், அதை சரிசெய்ய நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம். அதாவது மீன், ஆமை உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம்.
செவ்வாய் :-
செவ்வாய் கிரகம் திருமண விஷயத்தில் முக்கியமான தடையாக பார்க்கப்படுகின்றது. நாம் ஆடு அல்லது செம்மறி ஆட்டுக்கு உணவு கொடுப்பதன் மூலம் நம் கெட்ட வினைகள் குறைகின்றது. மேலும், குரங்குகளுக்கு தானியங்களையும் அளிக்கலாம்.
புதன் :-
உங்கள் ஜாதகத்தில் புதன் அதிபதியாக இருக்கும் பட்சத்தில் அவர் மிகச்சிறந்த பேச்சாளராக இருப்பார். புதன் திசை பிரச்சனையாக உள்ளவர்கள், கிளிகளுக்கு உணவு வைப்பது சிறந்தது. அப்படி இல்லையெனில், தங்கள் வீட்டின் மேல் கூரையில் பறவைகளுக்கு உணவுகள் மற்றும் தண்ணீர் வைக்கலாம்.
சுக்கிரன் :-
செல்வத்தை அளிக்கக்கூடிய கிரகம் சுக்கிரன். இந்த கிரகம் நல்ல முறையில் வலுப்பெற புறா உள்ளிட்ட பறவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுக்கலாம்.
சனி :-
நாம் அனைவரும் மிகவும் பயப்படும் ஒரு கிரகம் சனி. சனி பகவானின் அருளைப் பெற கருப்பு நிற விலங்குகள், பறவைகளுக்கு உணவளிக்கலாம். உதாரணமாக எருமை, கருப்பு நிற நாய், காகம் உள்ளிட்டவை.
ராகு – கேது :-
ராகு – கேது உங்கள் ஜாதகத்தில் வலுப்பெற நாய்களுக்கு ரொட்டி கொடுப்பதும், எறும்புகளுக்கு சர்க்கரை, மாவுப்பொருட்களை உணவாக கொடுப்பதும் நல்ல பலன்களைத் தரும்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 





 

பிறந்தநாள் வாழ்த்து திருமதி .ஜீவகுமாரன் வசந்தா (வண்ணம்) 07.07.21

யாழ் வல்லுவெட்டியை பிறப்பிடமாகவம் சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திருமதி . ஜீவகுமாரன் வசந்தா (வண்ணம்) அவர்களின்  பிறந்தநாள்.07.07.2021 ,இன்று .இவரை அன்புக்கனவர்.அன்பு மகன் 
குடும்ப உறவுகள் உற்றார்
உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள் இவரை வல்லுவெட்டி மாடந்தை பிள்ளையார் சூரிச்சிவன்   இறை அருள் பெற்று இனிமையும் புதுமையும் வரமாக வேண்டும் ! இதழ்கள் சிரித்து இதயம் இனிமை காண வேண்டும் ! அகவை ஒன்று கூடிட அளவற்ற மகிழ்ச்சி நீ காண வேண்டும் 
நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும்
 போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல
சீரும்சிறப்புடன்   பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன.வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து:திரு.பரமலிங்கம் ஸ்ரீ றாம் 03-07-21

யாழ் நீர்வேலி கரந்தனை பிறப்பிடமா​வும் கனடா ரொறன்றோவை  
 வதிவிடமாகக் கொண்ட  
திரு ஸ்ரீ றாம்  (றாம் ) அவர்களின் பிறந்தநாள்.03-07-2021..இன்று இவரை மனைவி அன்பு பிள்ளைகள் மருமக்கள்.சகோதர்கள் பேரப்பிள்ளைகள்  நண்பர்கள் உற்றார் உறவினர் வாழ்த்துகின்றனர் 
  இவர்களுடன் இணைந்து இவ் வுறவை நீர்வேலிப் பிள்ளையார்
 கனடா முருகன் 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  இன்று போல் என்றும் சந்தோசமாகவும்
 கல கலப்பாகவும் நோய் நொடி இன்றி உறவினர்கள்
 நண்பர்களும் இவரை
 நவற்கிரி   ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்   இறைஅருள் பெற்று   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    சகல சீரும்சிறப்பும்  பெற்று  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  தேவன் லோவி குடும்பத்தினரும்  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
 வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்த நாள்வாழ்த்து,செல்வன் காண்டீபன் ஆரிஸ் 03.07.21

சுவிஸ் சூரிச்சில்  வசிக்கும்.திரு திருமதி  காண்டீபன்  [ காண்டீ&அனுஜா ] தம்பதிகளின்
 செல்வப்புதல்வன்  ஆரிஸ்  (Aaryesh ) அவர்களின்   பிறந்தநாள்   06.07.2021.இன்று 
. இவரை  அன்பு அப்பா அம்மா  அக்கா  அம்மப்பா  அம்மம்மா அத்தான்    இரத்த உறவுகள்,   மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும்   
 வாழ்த்துகின்றனர்இவர்களுடன் இணைந்து இவரை நல்லைகந்தன்  இறை அருள் பெற்று 
என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி 
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன் அதிர்சன் 03.07.21

ஜெர்மனியை   பிறப்பிடமாகவும்  வதிவிடமாகவும் கொண்ட செல்வன்  சந்திரன் அதிர்சன் அவர்களின்  பிறந்த நாள்  03.07.2021 இன்று இவரை அன்பு  அப்பா அம்மா அண்ணா தம்பி அம்மம்மா   கோதரர்கள் மச்சான்  மச்சான்மார்   பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மாமா  மாமி மருமக்கள்  ‌பெறாமக்கள் .யேர்மன்   லண்டன்  கனடா சுவிஸ் இலங்கை வாழ் உறவுகள்  இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவற்கிரி அப்பா வைரவர் 
  இறை ஆசியுடன்   அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்துசகல கலைகளும் பயின்று நோய் நொடி இன்றி 
 பார்போற்றும்உத்தமனாக பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம செய்திகள் >>>



வீட்டு நிலை வாசலில் அறுகம்புல்லை இப்படி வைத்தால் மனித ரூபத்தில் இருக்கும் கெடுதல் கூட வீட்டிற்குள் நுழையாது

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கண்ணுக்குத் தெரிந்த மனிதர்கள் முதல் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்திகள் வரை எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து ஆக வேண்டி இருக்கின்றது. அதாவது நம்முடைய வீட்டிற்குள் நுழைய கூடிய சில கெட்ட சக்திகளால் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு கட்டாயம் பிரச்சனை ஏற்படும். எடுத்துக்காட்டிற்கு சில 
மனிதர்கள் நம்முடைய வீட்டிற்கு வந்து சென்றாலே அது குடும்பத்தில் பிரச்சனையை உண்டாக்கிவிடும். அது நமக்கே நன்றாக தெரியும். நம்முடைய வீட்டிற்கு அவர்களை வரவேண்டாம் என்று நம்மால் சொல்லவும் முடியாது. ரொம்பவும் நெருங்கிய சொந்தங்கள் ஆக, நண்பர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் வந்தால் நம் வீட்டில் கட்டாயம் ஒரு 
பிரச்சனை நடப்பது உறுதி.
இன்னும் சில பேர் வீடுகளில், சில பேர் வந்து ஏதாவது ஒரு பொருளை வீட்டிலிருந்து நமக்கே தெரியாமல் திருடி கொண்டு சென்றுவிடுவார்கள். சின்ன சின்ன பொருட்கள் திருடும் பழக்கம் அவர்களிடம் இருக்கும். அது நமக்கும் தெரியும். ஆனால் அதை வெளியில் சொல்ல முடியாத
 சூழ்நிலை இருக்கும்.
அடுத்தபடியாக கண்ணுக்கு தெரியாத கண் திருஷ்டி கெட்ட சக்திகளின் ஆதிக்கம் ஏதாவது ஒரு ரூபத்தில் நிலை வாசலுக்குள் நுழையவும் வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் நாம் எப்படி தடுப்பது என்பதைப் பற்றி தான் இன்று நாம் தெரிந்து
 கொள்ளப் போகின்றோம்
விநாயகரது கோவிலுக்கு சென்று விநாயகருக்கு அருகம்புல் மாலையை வாங்கி அணிவிக்க வேண்டும். உங்களது குடும்பத்தில் உள்ளவர்களுடைய பெயரை சொல்லி அர்ச்சனை செய்து உங்கள் வீட்டில் இருக்கும் சங்கடங்கள் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். விநாயகர் சன்னிதியை மூன்று முறை வலம் வாருங்கள். விநாயகர் கோவிலில் இருந்து விநாயகருக்கு போட்ட வேறு ஏதாவது 
அறுகம்புல் மாலையிலிருந்தோ அல்லது நீங்கள் போட்ட அருகம்புல் மாலையிலிருந்தோ ஒரு கைப்பிடியளவு அருகம் புல்லை வீட்டுக்கு வாங்கி வாருங்கள். இந்த அருகம்புல்லை ஒரு மஞ்சள் நிற நூலில் கட்டி உங்களுடைய நில வாசப்படியில் தொங்கவிட வேண்டும். அருகம்புல் காய்ந்தாலும் பரவாயில்லை. ஒரு மாதத்திற்கு ஒரு முறை 
அந்த அருகம்புல்லை மாற்றி விட்டு மீண்டும் புதியதாக கட்டிக்கொள்ளுங்கள். இப்படி நிலைப்படியில் விநாயகரது அருகம்புல் இருந்தால் உங்கள் வீட்டிற்கு வரும் கெட்ட எண்ணம் பிடித்த மனிதர்கள் கூட வீட்டிற்குள் நுழைய முடியாது. ஏதாவது ஒரு ரூபத்தில் கடவுள் அவர்களை உங்கள் வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து விடுவார்.
கண்ணுக்குத்தெரியாத எதிர்மறை ஆற்றல் கெட்ட சக்தி கண்திருஷ்டி இவைகளும் உங்கள் நிலை வாசப்படிகுள் நிச்சயம் நுழையாது. உங்களுடைய வீட்டில் இப்படி ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் ஒரே ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். கோவிலுக்கு
 செல்ல முடியாத சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் கொஞ்சம் அருகம்புல்லை எடுத்து உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகரின் திருவுருவப் படத்தின் பாதத்தில் வைத்துவிட்டு அந்த அருகம்புல்லை எடுத்து
 கூட நிலை வாசலில் கட்டலாம். நம்பிக்கையான பக்தி ஒன்று மட்டுமே இந்த இடத்தில் மூலதனமாக இருக்கவேண்டும் முயற்சி 
செய்து பாருங்கள்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



நீங்கள் இந்த கடவுளை வழிபட்டு சென்றால் நிச்சயம் வெற்றி தான்

 உங்கள் காரியத்தடை, வீடு, சொத்து பிரச்சனை, நோய்கள் தீர என்ற பலவிதமான பிரச்சனைகளுக்கு எந்தெந்த கடவுளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்
என்ன தான் போராடினாலும் ஒரு சிலருக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு எதை எடுத்தாலும் அதில் எளிதாக வெற்றி கிடைத்துவிடும். எப்படி இருந்தாலும் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் கடவுளை வணங்கி விட்டு செய்வது தான் வெற்றிக்கு உந்துகோலாக இருக்கும். அப்படி நாம் செய்யும் சில விஷயங்களுக்கு வணங்க வேண்டிய தெய்வங்கள் யார் யார்? என்று
 தெரிந்து கொள்ளலாம்.
என்ன தான் போராடினாலும் ஒரு சிலருக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு எதை எடுத்தாலும் அதில் எளிதாக வெற்றி கிடைத்துவிடும். எப்படி இருந்தாலும் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் கடவுளை வணங்கி விட்டு செய்வது தான் வெற்றிக்கு உந்துகோலாக இருக்கும். அப்படி நாம் செய்யும் சில விஷயங்களுக்கு வணங்க வேண்டிய தெய்வங்கள் யார் யார்? தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.
விக்னங்கள் தீர்க்கும் விநாயகர் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். விக்னங்கள் என்றால் வினைகள் அதாவது துன்பங்கள். துன்பங்கள் தீர்வதற்கு விநாயகரை வழிபட வேண்டும் என்பது சாஸ்திரம். ஆனால் விநாயகரை இடையூறுகள் நீங்கவும், காரிய தடை நீங்கவும், வழக்குகளில் வெற்றி பெறவும் வணங்கி விட்டு செல்ல ஜெயம் நிச்சயம்.
நோய் பிணிகள் நீங்க தன்வந்திரி பகவானை வணங்க சொல்ல கேட்டிருப்போம். தீராத நோய்களையும் தீர்த்துவிடும் புண்ணியவான் தட்சிணாமூர்த்தி. இவரை வணங்குபவர்களுக்கு எந்த நோயும் உடனே தீரும். பெரிய பெரிய ஆபரேஷன்களை எதிர் கொள்பவர்களுக்கு தட்சிணாமூர்த்தியை வணங்கி சென்றால் தைரியம் பிறக்கும். ஆயுள் முழுக்க ஆரோக்கியம் பெறுவதற்கு ருத்ர பகவானை வணங்கலாம்.
வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவதற்கு முருகப்பெருமானின் சுப்பிரமணிய வடிவத்தையும், நவக்கிரகங்களில் செவ்வாய் பகவானையும் வணங்கி விட்டு செல்ல அதிர்ஷ்டமான யோகம் உண்டாகும். உங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் பகைவர்களை துவம்சம் செய்ய திருச்செந்தூரில் வீற்றிருக்கும் முருகனை வேண்டுங்கள். சஷ்டி விரதம் இருந்தால் எதிரிகளை எதிர்த்துப் 
போராடலாம்.
நம் மேல் விழும் பொறாமை பார்வைகளை தவிடு பொடியாக்க, திருஷ்டிகள் விலக, பில்லி, சூனியம், ஏவல் போன்றவை அகல முத்துமாரி அம்மனை வணங்கலாம். சக்கரத்தாழ்வார், நரசிம்மர், வீரமாகாளி போன்றவர்களும் இவற்றிலிருந்து நம்மை பாதுகாப்பார். மனோதிடம் பெற ராஜராஜேஸ்வரியையும், ஆஞ்சநேயரையும் வழிபடலாம். மேலும் சனிபகவானுடைய பாதிப்புகள் குறைய ஆஞ்சநேயரையும், ஐயப்பன் சுவாமியையும் வணங்கினால் நல்ல பலன்கள் 
கிடைக்கும்.
மாங்கல்யம் நிலைக்க மங்கள கௌரியையும், புத்திர பாக்கியம் பெற சந்தானகிருஷ்ணன் மற்றும் சந்தான லட்சுமியை வழிபடலாம். செல்வம் பெருக செல்வாதிபதி குபேரனையும், மகாலட்சுமியுடன் லக்ஷ்மி நாராயணரையும் வழிபட ஐஸ்வர்யம் உண்டாகும். சுப நிகழ்வுகளுக்கு, சுபகாரியங்களுக்கு, திருமண வைபவங்களுக்கு காமாட்சி அம்மனையும், துர்க்கை அம்மனையும் வழிபட தடையின்றி வெற்றி உண்டாகும்.
வியாபாரம், தொழில், உத்தியோகம் சிறக்க திருப்பதி ஏழுமலையானை வணங்க வேண்டும். அவற்றில் சாதிக்க நினைப்பவர்கள் ஏழுமலையானை வணங்கினால் அமோக வெற்றி உண்டாகும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்கள் கட்டாயம் கஜலக்ஷ்மி தேவியை வணங்குவது அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். இவைகளையெல்லாம் நம் முன்னோர்கள் வழி வழியாகக் கடைப்பிடித்து வந்த சம்பிரதாயங்கள். 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ¨

. பிறந்தநாள் வாழ்த்து திரு தங்கா இளையதம்பி 24.06.2021

யாழ் தோப்பு  அச்சுவேலியை  பிறப்பிடமாகவும்,  தற்போது  கனடாவில் வசிக்கும்   திரு தங்கா இளையதம்பி
அவர்களின் ஐம்பதாவது  பிறந்த நாள் .24-06-2021...இன்று இவர்தனது பிறந்த நாளை உற்றார்  உறவினர்
 நண்பர்களுடன்  தனது இல்லத்தில் வெகுசிறப்பாக  இன்று கொண்டாடுகின்றார்
.இவரை அன்பு மனைவி அன்புப்  பிள்ளைகள் அன்புச்சகோதரர்கள் அத்தான் மருமக்கள் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
தோப்பு போதிப்பிள்ளையார் மற்றும் கனடா முருகன் சன்னதி முருகன்
 நல்லூர் கந்தன் 
இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  
வாழ்த்துகின்றன.

  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


Powered by Blogger.