யாழ் வடமராட்சிவல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்திருவிழா தேர்த்திருவிழா

யாழ் வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் திருவிழாக்களின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா (25.09.2026) இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமானது .மஹோற்சவத் தேர்த் திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது

இதனைத் தொடர்ந்து, நாளை(26.09.2026) பிற்பகல் 4 மணியளவில் கற்கோவளம் வங்கக்கடலில் வல்லிபுர ஆழ்வாரின் சமுத்திரத் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.

நாளைமறுதினம்(27.09.2026) காலை 10 மணிக்கு இடம்பெறும் பட்டுத் தீர்த்தத்துடன் இந்த ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவம் நிறைவு பெறவுள்ளது.

பக்தர்களின் கவனத்திற்கு..
தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களில் கலந்துகொள்ளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வசதி கருதி, ஆலயத்தைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிதண்ணீர் வசதிகள் மற்றும் 
அன்னதான  ஏற்பாடுகள் நடைபெறும் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://lovithan.blogspot.com/2026/08/blog-post_28.html



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.