| புதன்கிழமை, 31 ஒக்ரோபர் 2012,By.Lovi. |
| எளிதில்
எலும்பு முறிவு ஏற்படுத்தும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தற்போது இளம் வயதினரையும்
பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு
திறன் குறைவு நோய் ஏற்படுவது வழக்கம். இந்த நோயின் காரணமாக எலும்புகள் போதிய
சக்தியில்லாமல் எளிதில் உடையும் நிலையை அடைகின்றன. இளைய தலைமுறையினர் பாதிப்பு சுண்ணாம்பு சத்து, வைட்டமின் டி சத்து குறைவு போன்றவற்றால் இந்த நோய் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு காணப்பட்ட இந்த நோய் தற்போது இளம் வயதினருக்கும் காணப்படுகிறது. பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது, போதிய அளவு உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் இளைஞர்களை தாக்கி வருகிறது. கால்சியம் சத்து அதிகம் உள்ள பால், கீரைகள் போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பதும் இந்த நோய் தாக்குவதற்கு காரணமாக அமைகிறது. மேலும் வைட்டமின் டி குறைபாடினாலும் முதுகெலும்பை தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய், பின்னர் கை கால் எலும்புகளையும் பாதிக்க செய்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். எனவே சத்தான உணவுகளை சாப்பிட்டால் இந்த நோய் பாதிப்பிலிருந்து தப்பலாம் என்று கூறும் நிபுணர்கள் அதற்கான உணவுகளை பரிந்துரைத்துள்ளனர். பால் மற்றும் பால் பொருட்கள் குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்களை சாப்பிட வேண்டும். சீஸ், யோகர்டு, பன்னீர், ஸ்கிம்டு மில்க் பவுடர் போன்றவற்றில் கால்சியம் காணப்படுகிறது. இவற்றை சாப்பிட்டால், எலும்புகள் பலமடையும். கொட்டைகள் பாதாம், பிஸ்தா போன்ற கொட்டைகளில் உடலுக்குத் தேவையான தாது உப்புகள் உள்ளன. கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்றவைகள் காணப்படுகின்றன. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் பாதிப்படையாமல் தப்பிக்கலாம். சத்தான காய்கறிகள், பழங்கள் புருக்கோலி, முட்டைக்கோஸ், காலிப்ளவர், பீட்ரூட், ஓக்ரா போன்ற காய்கறிகளை தினசரி சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம். ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரீஸ், வாழைப்பழம், ஆப்பில் போன்றவை எலும்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கும். ராகி சாப்பிடுங்களேன் 100 கிராம் ராகியில் 330 முதல் 350 கிராம் கால்சியம் உள்ளது. எனவே ராகி சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். பேரிச்சை நல்லது பேரிச்சம்பழத்தில் கால்சியம், மாங்கனீஸ் உள்ளது. அதேபோல் தாமிரச்சத்துக்களும், மங்கனீசியமும் காணப்படுகின்றன. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. வைட்டமின் டி சத்து எலும்புகளின் வளர்ச்சிக்கும், சருமத்திற்கும் வைட்டமின் டி அவசியம். எனவே வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. எனவே உடலில் சூரிய ஒளி படுமாறு நிற்கலாம். பருப்பில் இருக்கும் சத்து கருப்பு உளுந்து கால்சியம் சத்து நிறைந்தது. அதேபோல் சோயபீன், கொள்ளு போன்றவைகளில் கால்சியம் சத்து காணப்படுகின்றன. அதேபோல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன் உணவுகளை உட்கொள்ளலாம். உணவியல் நிபுணர்கள் கூறியுள்ள இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்பு உடைதல் நோய்களில் இருந்து தப்பிக்கலாம். |
எலும்பை வலுப்படுத்தும் உணவுகள்
Tags :
சுகாதார செய்திகள்
பக்கவாதத்தை தடுக்கும் உணவுகள்
| செவ்வாய்க்கிழமை, 30 ஒக்ரோபர் 2012, By.Lovi. |
| மூளைக்கு
செல்லும் இரத்தத்தின் அளவு குறைவதாலோ அல்லது இரத்தக் குழாய்களில் பிரச்னைகள்
ஏற்படுவதாலோ மூளையின் செயல்பாடு குறைகிறது.
இதனால் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாமல் போகிறது. உதாரணமாக சரியாக
பேச, புரிந்து கொள்ள முடியாதது, சில உறுப்புகள் இயங்காமல் போவது என்பன. இது உடலில் அதிக உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாயிருத்தல் போன்றவற்றாலும் ஏற்படும். ஆகவே அத்தகையவற்றை சரிசெய்ய நாம் உண்ணும் உணவுகளில் கட்டுப்பாடு வேண்டும். எந்த ஒரு உணவையும் கட்டுப்பாடின்றி சாப்பிடக்கூடாது. பீன்ஸ் மற்றும் மற்ற ஃபோலேட் நிறைந்த உணவுகள் பீன்ஸ் இதயத்திற்கு மட்டுமின்றி மூளைக்கும் மிகவும் சிறந்த உணவுப்பொருள். ஏனெனில் இதில் வைட்டமின் பி ஃபோலேட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் பக்கவாதத்தை தடுக்கும் சிறந்த உணவுகளில் பீன்ஸ் மற்றும் ஃபோலேட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிட்டால், பக்கவாதம் வராமல் தடுக்கலாம் என்று ஒரு ஆய்வின் மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஓட்ஸ், பாதாம் மற்றும் சோயா ஓட்ஸ், பாதாம் மற்றும் சோயா உணவுப் பொருட்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன என்று ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த உணவுப் பொருட்களை டயட்டில் சேர்த்துக் கொண்டால், இது இரத்ததில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை 28% குறைக்கிறது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்டி- ஆக்ஸிடன்ட் உணவுகள் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடுவதாலும் பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஏனெனில் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உடலில் இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக்குழாய்களில் புண் மற்றும் பிளேக் போன்றவை ஏற்படாமல் தடுகின்றது. இதனால் உடலில் இரத்த ஓட்டமானது சீராக ஓடுகிறது. பொட்டாசியம் உணவுகள் பொட்டாசியம் அதிகம் நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்த்தால், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் டயட்டில் பொட்டாசியம் நிறைந்த உணவுகளான வாழைப்பழம், முளைப்பயிர்கள் மற்றும் உலர்ந்த திராட்சை போன்றவற்றை சேர்த்தால், உடலுக்கு தேவையான பொட்டாசியச் சத்து கிடைக்கும். ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உணவுகள் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவுகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். அதிலும் சாலமன் மீன் மிகவும் சிறந்தது. இந்த மீனை சாப்பிட்டால், பக்கவாதம் ஏற்படாமலும் தடுக்கலாம். எப்படியெனில் அதில் உள்ள ஒமேகா-3, உடலில் இரத்த ஒட்டத்தை அதிகப்படுத்தும் |
Tags :
சுகாதார செய்திகள்
மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு ???
சோற்றுக்கற்றாழைமருத்துவ குணங்களுக்கென்றுபயன்படுத்தப்பட்டு வருகிறது.இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்,ரெசின்கள், பாலிசக்கரைடு மற்றும் ஆலோக்டின்பி எனும் பலவேதிப்பொருட்கள்உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் மூசாம்பரம் எனப்படுகிறது.
தளிர்பச்சை, இளம்பச்சை, கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்ந்தவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.
பொதுவாக் 40 வயதைக் கடந்து விட்டாலே மூட்டு வலி, கை,கால் வலி ஏற்படுவது பெரிதும் வாடிக்கையாகி விட்டது. அதிலும் வயது முதிர்ந்தவர்களுக்கு கால் மூட்டில் இருக்கும் திரவம் குறைவதால், நடப்பதே மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக் கூடியதாகி விட்டது.
மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற "அலோசன் ஹெல்த் டிரிங்க் உதவும்.இது உலகின் அபூர்வ சாகாவரம் பெற்ற சோற்றுக் கற்றாழை மூலிகையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.
மேலும் எலும்புகளுக்குத் தேவைப்படும் சுண்ணாம்புச் சத்தையும் (கால்ஷியம்) அலோசன் ஹெல்த் டிரிங்க் அளித்து மூட்டு வலியைப் போக்க உதவுகிறது.
மஞ்சள் காமாலை நோய்க்கும் சோற்றுக் கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.
கண்நோய், கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை, மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர, உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.
உள் மருந்தாக வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.
நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும், தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம், வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.
பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி, சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து, ஈரப்பதம் அளிக்கும்.
இத்தகைய கற்றாழை இளம் தலைமுறையின் இனிய தோழி தானே! வீட்டிற்கொரு கற்றாழை வளர்ப்போம்

தேன் ஒரு மாமருந்து !!! ?
Monday29 October 2012.By.Lovi..தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது.
மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.
சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது.
கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது.
வயிற்றின் நண்பன் தேன்
வயிற்றில் ஏற்படும் புண், அழற்சி, ஈரல், பித்தப்பை நோய்கள் அனைத்துக்கும் மருந்தாக தேன் அமைந்துள்ளது. அதனால்தான் வயிற்றின் நண்பன் தேன் என்கிறோம்.
ஒன்று முதல் மூன்று தேக்கரண்டி தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வர வேண்டும்.
இப்படி செய்தால் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும்.
இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும்.
மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன்.

உடற்பயிற்சிகளும் உடல் வலிகளும்!?
Sunday 28 October 2012 .By.Lovi. உலகளவில் இன்று பத்தில் 4 பேர் தீராத வலியினால் அவதிப்படுகின்றனர். இதன் பின்னணியில் உடல்ரீதியான காரணங்கள், மன அழுத்தம், வேறு நோய்களின் பாதிப்பு என எத்தனையோ இருக்கலாம். சில வகை வலிகளை சாதாரண மருத்துவ முறைகளால் தீர்க்க முடியாத பட்சத்தில், பல்நோக்கு
அணுகுமுறையில், சிறப்பு சிகிச்சைகள் தேவைப்படலாம். எது எப்படியோ, வலிக்கான சிகிச்சை முடிந்ததும், அதை நிரந்தரமென நினைத்து நிம்மதியடைய வேண்டாம். மறுபடி அதே வலி வராமலிருக்க, சீரமைப்பு சிகிச்சை முறை அவசியம்’’ என்கிறார் வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை
மருத்துவர் குமார்.
பிசியோதெரபி எனப்படுகிற அந்த சீரமைப்பு சிகிச்சை முறையின் அவசியம் பற்றியும், அதை மேற்கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றியும் விரிவாகப் பேசுகிறார் அவர்.‘‘வலிக்கான சிகிச்சை மேற்கொண்டவர்கள், சிகிச்சைக்குப் பிறகு வாழ்க்கை முறையிலும், உணவிலும் கவனம் செலுத்த வேண்டியது எத்தனை அவசியமோ, அதே அளவு சீரமைப்பு சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டியதும் முக்கியம்.
அதைக் கடைப்பிடிக்காவிட்டால், அனேக வலிகள் மறுபடி வரலாம். சீரமைப்பு சிகிச்சை முறை என்பது வலி நிவாரண சிகிச்சையின் கடைசிக் கட்டம். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அதை மேற்கொள்ள வேண்டும். உடலுக்கும் மனதுக்கும் பயிற்சி அளிப்பதுடன், தினசரி வேலைகளை சரியாகச் செய்யவும் அந்த சிகிச்சை வழி காட்டும்.
உதாரணத்துக்கு முதுகு வலி வந்து, சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், வலி மறைந்ததும் அதை மறக்கக் கூடாது. எப்படி உட்கார்வது, எழுந்திருப்பது, கீழே விழுந்த பொருளை எப்படி எடுப்பது, கம்ப்யூட்டர் வேலையை எப்படிப் பார்ப்பது என எல்லாவற்றுக்கும் பயிற்சி எடுக்க வேண்டும். அதாவது முதுகைத் தவறாகப் பயன்படுத்தாமல், சரியாகப் பயன்படுத்துவதற்கான அந்தப் பயிற்சி, மறுபடி வலி வருவதைத் தவிர்க்கும்.
அதி தீவிர வலிகளுக்கு, உடற்பயிற்சியுடன், ஐ.எஃப்.டி., லேசர், அல்ட்ராசானிக், மசாஜ் எனக் கூடுதலாக சில விஷயங்களையும் மருத்துவர் பரிந்துரைப்பார். எல்லா பயிற்சி களையும் மருத்துவரின் லோசனையின் பேரில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். வலி இருந்தாலும் பரவாயில்லை, உடற்பயிற்சியை நிறுத்தக் கூடாது என்கிற தவறான அபிப்ராயம் பலருக்கும் இருக்கிறது. அது மிகவும் தவறு. உடம்பை வருத்தி எந்தப் பயிற்சியை செய்வதும் ஆபத்தானது.
உங்கள் நண்பருக்கு கையோ, காலோ வலிக்கிறது.... மருத்துவர் அவருக்கு சில பயிற்சிகளைப் பரிந்துரைக்கிறார். அதே இடத்தில் உங்களுக்கும் வலி வருகிறது என்பதால், உங்கள் நண்பர் செய்கிற அதே பயிற்சிகளை நீங்களும் செய்யக் கூடாது. வலிக்கான காரணம், அதன் தீவிரம் போன்றவற்றைப் பார்த்துவிட்டு, உங்களுக்கான சரியான பயிற்சியை மருத்துவர்தான் பரிந்துரைக்க வேண்டும்.செய்ய வேண்டிய நேரத்தில் செய்யத் தவறுகிற உடற்பயிற்சிகளும் சரி, செய்யக்கூடாத நேரத்தில் செய்கிற உடற்பயிற்சிகளும் சரி... இரண்டுமே ஆபத்தானவை!’’
Tags :
உடல் நலம்
பல்லுக்கு மட்டும் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல்
Sunday 28 October 2012.By.Lovi.சம்பந்தப்பட்ட உள்ளுறுப்புகளையும் சோதிப்பது நல்லது!
உலகில் மனித இனம் தவிர்த்து வேறெந்த உயிரினத்துக்கும் கிடைக்காத சொத்து, சிரிப்பு. அந்த சிரிப்பை சிறப்பாக்குவது பற்கள். அந்தப் பற்களைப் பதம் பார்க்கும் பிரச்னைகளும் அக்கு பிரஷர் தருகிறபோது பல்லிளித்து ஒதுங்கிவிடுகின்றன. பொதுவாக பற்கள் முக அழகைக் கூட்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதே பற்கள் உடல் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தைக் காட்டும் இண்டிகேட்டர் என்பது தெரியுமா?
ஆம், மேல் வரிசையோ... கீழ் வரிசையோ... முன் நான்கு பற்கள் கிட்னி, சிறுநீர்ப்பை ஆகியவற்றின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. அதே போல, அதற்கடுத்துள்ள சிங்கப்பல் எனப்படும் ப்ரீமோலார் பற்கள் இரண்டும் கல்லீரல், பித்தப்பையின் சக்தியை உணர்த்துகின்றன. அதற்கடுத்த இரண்டு பற்களும் பெருங்குடல் மற்றும் நுரையீரலைப் பிரதிபலிக்கின்றன. கடைவாய்ப் பற்களுக்கு முந்தைய இரண்டு பற்களால் முறையே வயிறு, மண்ணீரல் ஆகியவற்றின் சக்தியும், கடைவாய்ப் பற்களால் இதயம், சிறுகுடலின் சக்தியும் எதிரொலிக்கப்படுகிறது. மேற்சொன்ன உள்ளுறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அது சம்பந்தமான பற்கள் தாமும் பாதிக்கப்பட்டு அபாய சங்கு ஊதும். எனவே பல் பாதிப்புக்கு உள்ளானவர்கள், பல்லுக்கு மட்டும் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் சம் பந்தப்பட்ட உள்ளுறுப்புகளையும் சோதிப்பது நல்லது.
பற்கள் தொடர்பான அக்கு பிரஷர் சிகிச்சை, குழந்தைகளுக்கும் செய்யக்கூடிய அளவில் எளிமையானது. சில குழந்தைகளுக்கு பால் பற்கள் விழுந்து மறுபடி முளைக்க தாமதமாகலாம். அந்தக் குழந்தைகளின் குதிகால்களில் உள்ள ‘கிட்னி சக்தி புள்ளி’களை தினசரி மூன்று வேளை விட்டுவிட்டு அழுத்தி வந்தால் போதும், பலமான பற்கள் முளைக்கத் துவங்கும்.
எல்லோரும் பரவலாகச் சந்திக்கும் பல் சம்பந்தப்பட்ட அடுத்த பிரச்னை, தீராத பல்வலி. இதைக் குணப்படுத்த ‘விரல்நுனி அழுத்தம்’ கைகொடுக்கிறது. முன் நான்கு பற்களுக்கு கட்டை விரலின் நுனியை தொடர்ச்சியாக இரு நிமிடங்கள் அழுத்தி விடவும். அடுத்த நான்கு பற்கள் வலித்தால், ஆட்காட்டி விரலையும், அடுத்த நான்கு பற்களுக்கு முறையே நடு, மோதிர விரலையும், கடைவாய்ப் பற்களுக்கு சுண்டுவிரலையும் தொடர்ந்து அழுத்தி வந்தால் பல்வலியைக் குணப்படுத்தலாம்.
பொதுவான ஒரு முறையும் உண்டு. அதாவது கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சிறிய ஐஸ்கட்டியை வைத்து தொடர்ந்து இரு நிமிடம் அழுத்தினால், பல்வலி பறந்துபோகும்.
அடுத்ததாக பற்குழி. பல் மருத்துவரிடம் சென்று பற்குழிகளை சுத்தம் செய்து அடைத்துக் கொள்வதுதான் இதற்கு சிறந்த வழி. ஆனால், எதைக்கொண்டு அடைக்கிறோம் என்பது முக்கியம். தற்போது இதற்கு ‘அமால்கம்’ முறையில் வெள்ளி:பாதரசக் கலவை (30:70) பயன்படுத்தப்படுகிறது. இந்த முறைக்கு உலகின் பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. காரணம், இம்முறையால் ‘பாதரச ஆக்சைடு’ என்கிற விஷம் நம் உடலுக்குள் செல்கிறது. சாப்பிடும்போது உணவோடு உணவாகக் கரைந்தும், சூடான பானங்களை அருந்தும்போது ஆவியாக மாறியும் உடலுக்குள் இது சென்றுவிடுகிறது. இதனால் நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாகிறது. பாதரசம் இல்லாமல், ‘செராமிக்’ முறையில் அடைத்துக் கொள்வது நல்லது.
இனி சற்று கீழிறங்கி கழுத்து பிரச்னைகளைப் பார்க்கலாம். ‘எலும்பு தேய்வதாலேயே கழுத்து வலிக்கிறது’ என்பதுதான் தற்போதைய பரவலான கருத்து. அந்த எண்ணத்துடனேயே ‘நெக் காலர்’, ‘டிராக்ஷன்’ என சிகிச்சை எடுக்கக் கிளம்பி விடுகிறார்கள். கழுத்து எலும்பின் அமைப்பானது முன், பின், பக்கவாட்டில் திரும்புவதற்கு வசதியாகவே அமைக்கப்பட்டுள்ளது. அதை மேல்நோக்கி இழுக்கும் ‘டிராக்ஷன்’ சிகிச்சையால் ‘ரைநெக்’ (wry neck) என்ற பிரச்னை ஏற்படலாம். அதாவது, ‘டிராக்ஷன்’ செய்து கொண்டபின் கழுத்தை பக்கவாட்டில் முழுமையாகத் திருப்புவதற்குச் சிரமப்பட வேண்டியிருக்கும்.
கட்டைவிரலைத் தொடர்ந்து சுழற்றியும், கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடைப்பட்ட சதைப் பகுதியை மெதுவாக அழுத்தி விட்டும் கழுத்து வலியைக் குணப்படுத்தலாம் என்கிறது அக்கு பிரஷர். ‘சூஜோக்’ வளையமும் கழுத்துவலி தீர்ப்பதில் பயன்படுகிறது.
பெண்கள் அதிகளவில் கழுத்தில் சந்திக்கும் பிரச்னை, ‘காய்டர்’ எனப்படும் ‘முன்கழுத்துக் கழலை’. தைராய்டு குறைவு பிரச்னையான இது, மரபு ரீதியாகவோ சரிவிகித உணவு கிடைக்காததாலோ ஏற்படுகிறது.
அக்கு பிரஷரில் ‘தைராய்டு பாதிப்பு’ இருக்கிறதா அல்லது ஏற்படலாமா என்பதைக்கூட முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும். கட்டை விரலின் கீழ்ப் பகுதியை ஒட்டிய உள்ளங்கையில் அழுத்தும்போது வலி இருந்தால் பாதிப்பு இருக்கிறதென்பதைத் தெரிந்துகொள்ளலாம். இதற்கு சிகிச்சையும் அதே ‘கட்டைவிரல் - உள்ளங்கை’ அழுத்தமே.
காதில் உள்ள தைராய்டுக்கான அக்கு புள்ளியைத் தூண்டியும் இந்தக் கழலை நோயைக் குணப்படுத்தலாம். இதற்கு காதணி/ தோடு போன்ற அணிகலன்களே போதுமானது. இந்த இடத்தில் ஒரே கல்லில் இரு மாங்காய். காதுக்கு அழகு சேர்த்த மாதிரியும் ஆச்சு; பிரச்னையைக் காத தூரம் விரட்டிய மாதிரியும் ஆச்சு!
ஈசி எக்ஸ்ட்ரா டிப்ஸ்
* பல் துலக்கும்போது பிரஷ்ஷை நீள்வட்டமாக சுழற்றி துலக்குவது நல்லது.
* அதிகாலையில் வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் கொப்பளித்தால், பற்கள் ஆரோக்கியம் பெறும்.
* பல் சொத்தை, ஈறு வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு கிராம்பு தைலத்தை பஞ்சில் நனைத்து சம்பந்தப்பட்ட இடத்தில் வைக்க, குணமாகும்.
* கீரை வகைகள், சுண்டக்காய், பால் பொருட்கள் பற்களுக்கு வலிமை சேர்ப்பவை.
* படிக்கிறபோது எழுத்துகள் இரு புருவங்களுக்கு மையத்தில் இருக்குமாறு படித்தால், கழுத்து வலியிலிருந்து தப்பிக்கலாம்.
* தைராய்டு பிரச்னை உள்ளவர்கள், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது
Tags :
உடல் நலம்
முதுகுவலிக்கு வேக்யூம் சிகிச்சை!
நான்கு கால் விலங்கு நிலையிலிருந்த மனிதனை நிமிர்த்தி நேராக்கியது பரிணாம வளர்ச்சி. அந்தப் போராட்டத்தில் ‘பெண்டு நிமிர’ உழைத்த உறுப்பு, முதுகெலும்பு. உறுதியற்ற மனிதர்களை ‘முதுகெலும்பில்லாதவனே’ என்பார்கள். வலிமைக்கு அடையாளமாகக் கருதப்படும் முதுகெலும்பை காலமாற்றம் திரும்பவும் வளைக்கப் பார்க்கிறது. ஆம், ‘முதுகுவலி’ இப்போதைய வாழ்க்கைமுறையில் தவிர்க்க முடியாத துயரம். ‘உட்கார்ந்தபடியே நீண்டநேர வேலை’, ‘தொடர்ச்சியான டூ-வீலர் டிரைவிங்’, ‘போதிய உடற்பயிற்சியின்மை’ போன்றவையே இதற்கு முக்கியக் காரணங்கள். இப்படிப்பட்ட முதுகுப் பிரச்னைகள் மட்டுமல்லாமல் வயிற்றுப் பிரச்னைகளுக்கும் அக்குபிரஷரில் இருக்கிறது ஆச்சரியப்படத்தக்க தீர்வு!
முதுகுவலிக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு நடக்கவே முடியாமல் போன நடிகர், நடிகைகள் பற்றிய செய்திகளை பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். அவர்கள் பிரபலங்கள் என்பதால் செய்தி வெளியே தெரிகிறது. இதே பாதிப்பால் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடக்கும் சாதாரண மக்கள் எத்தனையோ பேர்! சென்சிடிவ்வான நரம்புகளின் சங்கமமான முதுகெலும்பை கண்டபடி அறுத்து விளையாடுவதும், மூளையோடு தொடர்புடைய முதுகெலும்பு திரவத்தை நினைத்த நேரத்தில் ஏதோ சிறுநீர் எடுத்துப் பரிசோதிப்பது போல உறிஞ்சுவதும் இன்று சர்வசாதாரணமாக நடக்கிறது. முதுகுவலி என சிகிச்சைக்குப் போனால் கிடைக்கும் முதல் அட்வைஸ், ‘கொஞ்ச நாளைக்கு வண்டி ஓட்டாதீர்கள்!’ என்பதாகத்தான் இருக்கும். வேலையை சுலபமாக்குவதற்கும், சௌகரியத்துக்காகவும்தான் கண்டுபிடிப்புகள். டூவீலர்களைப் பொறுத்தவரை ஷாக் அப்சார்பர் சரியான பராமரிப்பில் இருந்தால் தாராளமாகப் பயன்படுத்தலாம். வாகனத்தை ஓட்டும்போது நம் உடல் அதிக நேரம் ஒரே பொசிஷனில் இல்லாதபடி பார்த்துக்கொண்டால் மட்டும் போதும்.
‘முதுகுவலி ஏற்பட முதுகெலும்பு மட்டுமே காரணமல்ல’ என்பதுதான் அக்கு சிகிச்சை சொல்வது! நம் வயிற்றின் இடப்புறமாக அமைந்துள்ளது பெருங்குடலின் கீழிறக்கக் குடல். அந்தப் பெருங்குடலின் சக்தி குறையத் தொடங்கும்போது, அந்த பாதிப்பு இடது முதுகில்... முதுகெலும்பின் 4வது லம்பாரை ஒட்டிய சவ்வுகளில் வலி மூலம் உணரப்படும். ஆக, பெருங்குடலின் சக்தியைத் தூண்டிவிட்டாலே அந்த முதுகுவலியை விரட்டிவிடலாம்.
நோய்க்கான மூலகாரணத்தைக் கண்டுபிடித்துச் சரி செய்யும் அக்கு சிகிச்சை கோட்பாட்டின்படி, முதுகுவலியைக் கண்டறிவது மிகவும் எளிமையான விஷயம். கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கொஞ்சம் கீழ்ப்புறமாக சற்று அழுத்திப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். மெட்டாகார்பல் எலும்புப் பகுதியான அந்தப் பகுதியை அழுத்தும்போது வலி இருப்பின், முதுகுவலி பிரச்னை இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும்போது மெல்ல மெல்ல முதுகுவலி மாயமாகும் அதிசயத்தை உணர்வீர்கள்.
இதற்கு இன்னொரு சிகிச்சை, கப்பிங் தெரபி. அக்கு நிபுணரை ஆலோசித்து ஒரு சிட்டிங் பயிற்சி பெற்றால் போதும், வீட்டிலிருந்தபடியே செய்துகொள்ள முடிகிற எளிமையான பயிற்சிதான் இதுவும் (அடுத்தவர் உதவி தேவைப்படலாம்). வேக்யூம் முறையில் செயல்படும் கண்ணாடி அல்லது ரப்பரால் ஆன உபகரணங்களே இதற்கான கருவிகள். கழுத்தில் ஆரம்பித்து இடுப்பு வரை இந்த ‘வெற்றிட’ உபகரணங்களை கவிழ்த்து வைத்து சில நிமிடங்கள் படுத்திருந்தாலே போதும். இதைத் தொடர்ந்து செய்கிறபோது பெருங்குடலின் சக்தி நன்கு தூண்டப்பட்டு, பிரச்னை குணமாகிறது. முதுகைப் பொறுத்தவரை முக்கியமான ஒரே பிரச்னை இந்த முதுகுவலிதான். சுலபமான இந்த முறைகளை விட்டுவிட்டு, எதற்கெடுத்தாலும் சி.டி., எம்.ஆர்.ஐ ஸ்கேன் என்று சிக்கிவிடாதீர்கள். ஒருமுறை இந்த ஸ்கேன்களை எடுத்தால் நான்கரை ஆண்டுகள் அணு உலையில் வேலை பார்த்ததற்குச் சமம். அவ்வளவு கதிர்வீச்சு அதில் உண்டு. கதிர்வீச்சின் அபாயங்களை அறிவீர்கள்தானே?
அடுத்ததாக, வயிறு சார்ந்த பிரச்னைகளைப் பார்ப்போம். நமது உடலில் மார்புக்குக் கீழே ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் முக்கியக் காரணம் ‘சோலார் பிளக்சஸ்’ எனப்படும் நாபிச்சக்கரம்தான். இது வேறொன்றும் இல்லை, சினிமாக்காரர்கள் பம்பரம் விளையாட, ஆம்லெட் போட பயன்படுத்தினார்களே... அதே தொப்புள்தான். எந்த நேரமும் சக்தி பரிமாற்றம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அக்குபங்சர் நிபுணர்கள்கூட உடலின் மற்ற பகுதிகள் போல் இந்த இடத்தில் ஊசி குத்த அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், அதே நாபிச்சக்கரத்தின் மூலம் வயிற்றுவலி உட்பட வயிறு சம்பந்தப்பட்ட 13 வகை நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதுதான் விசேஷம்.
‘மாக்சுபூசன்’ எனப்படும் அந்தச் சிகிச்சைக்குத் தேவையானவை, சிறு இஞ்சித் துண்டும் கொஞ்சம் உப்பும். தங்களுக்குத் தாங்களே செய்துகொள்வது சிரமம் என்பதால் உதவிக்கு யாரையாவது அழைத்துக் கொள்வது சிறந்தது. மல்லாந்து படுத்தபடி, தொப்புளின் மீது உப்பைப் பரப்ப வேண்டும். இஞ்சித் துண்டை பட்டையாகத் தட்டி அந்த உப்பின்மீது வைக்க வேண்டும். காய்ந்த மருக்கொழுந்து இலையைச் சுருட்டி அதன் நுனியில் தீயைப் பற்ற வைத்துக் கொண்டு அதை இஞ்சியின் மீது காட்டி வந்தால், தொப்புளோடு தொடர்புடைய சகல நாடிகளும் புத்துணர்ச்சி பெறுவதோடு, வயிறு சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்னையும் வராது.
அதிகம் பளு தூக்குவதினாலோ, எசகுபிசகான உடற்பயிற்சியின்போதோ, குழந்தைகளைத் தவறுதலாக கையாளுகிறபோதோ நம் குடலில் ஏற்ற இறக்கம் ஏற்படலாம். குடலேற்றம் மலச்சிக்கலுக்கும், குடலிறக்கம் வயிற்றுப்போக்குக்கும் வழிவகுத்து விடலாம். இதை ஆஃப் செய்யும் ஸ்விட்சும் தொப்புள்தான். தொப்புளைச் சுற்றிலும் சிறு அழுத்தம் கொடுத்து, இறுதியாக தொப்புள் பகுதியை சற்று அதிக அழுத்தம் கொடுத்து அசைத்தால் குடலின் ஏற்ற இறக்கம் மாறி, தான் இருக்க வேண்டிய இடத்தில் வந்து சமர்த்தாக உட்கார்ந்துகொள்ளும்.
ஈசி எக்ஸ்ட்ரா டிப்ஸ்
* மெட்டாகார்பல் எலும்புப் பகுதியில் வலியுள்ள இடங்களில் சில மிளகுகளை வைத்து பிளாஸ்டர் ஒட்டி மூடிவிடலாம். பிறகு அவ்வப்போது அந்த இடத்தை அழுத்துவதன் மூலமும் முதுகுவலியை விரட்டலாம்.
* தொடர்ந்து உட்கார்ந்திருப்பதைத் தவிர்ப்பது சிறந்தது. கிடைக்கிற இடைவேளைகளில் உடலுக்குத் தேவையான பயிற்சிகளைச் செய்யலாம். அக்குபிரஷர் பயிற்சிகளுக்குத்தான் தனியான இடம் தேவையில்லையே.
* முதுகுவலி பிரச்னை உள்ளவர்கள் முன்னோக்கிக் குனிவதைத் தவிர்க்க வேண்டும்.
* எளிமையான சர்வாங்காசனம் போன்ற யோகா பயிற்சிகளை செய்து வருவதும் முதுகுவலிக்கு நல்ல மருந்து

நடைப்பயிற்சி செய்தால் மூளைக்கு நல்லது: ஆய்வில் தகவல்
| வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012,By.Lovi. |
| வயதானவர்களுக்கு நினைவுத்திறன்
குறைபாடு ஏற்படுவது இயல்பு. 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு படிப்படியாக அவர்களின்
மூளை சுருங்கி நினைவுத்திறன் படிப்படியாக குறைந்துவிடும்.
டிமெண்டியா எனப்படும் இந்த ஞாபகத்திறன் குறைபாட்டினை உடற்பயிற்சி செய்வதன் மூலம்
தடுக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட 638 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர், அதில் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன. மனிதர்களுக்கு வயதாகும் போது அவர்களின் மூளை சுருங்குவது இயல்பு. இப்படி மூளை சுருங்கும் போது, நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படும். மூளையில் கட்டளைகள் உருவாகும் இடம் கிரே மேட்டர் என்கிற சாம்பல் பகுதி என்றும், அந்த கட்டளைகளை கடத்தும் பகுதி வைட் மேட்டர் என்கிற வெள்ளைப்பகுதி என்றும் இரண்டாக அறியப்படுகிறது. இதில் வயதாக ஆக, மூளையின் வெள்ளைப்பகுதி பாதிக்கப்படும். சாம்பல் பகுதி சுருங்கும். 60- 70 வயதுகளில் இருப்பவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளை சுருங்குவதை தடுக்க முடியும் என்றும், இதன் மூலம் வயோதிகத்துடன் தொடர்புடைய டிமெண்டியா எனப்படும் நினைவிழப்பு நோயை தடுக்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். வயதானவர்கள் தினந்தோரும் நல்ல நடைபயிற்சி செய்தாலே அதுவும் உரிய பலன் தரும் என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள். அதேசமயம் மூளைக்கு வேலை தரும் சுருக்கெழுத்து, சொடோகு போன்ற விளையாட்டுக்கள் வயோதிகத்தில் மூளை சுருங்காமல் தடுக்கவில்லை என்றும் இவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். உடற்பயிற்சியினால் ரத்த சுழற்சி ஊக்குவிக்கப்படுவதால், அது மூளை செல்களில் ரத்த சுழற்சியை அதிகப்படுத்தி மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதால் மூளை சுருங்காமல் தடுக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். எனவே வயதான காலத்தில் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்புபவர்கள், தினசரி உடற்பயிற்சி அதாவது நடைப்பயிற்சி செய்வது அவசியம் என்பது ஆய்வாளர்களின் அறிவுரையாகும் |
Tags :
சுகாதார செய்திகள்
PDF கோப்புக்களை Text கோப்புக்களாக மாற்றுவதற்கு
| வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012,By.Lovi. |
| தட்டச்சு செய்யப்பட்ட Document-களை
பாதுகாப்பான முறையில் பேணுவதற்கு ஏனைய கோப்பு வகைகளினைக் காட்டிலும் PDF
கோப்புக்கள் சிறந்தவையாகும்.
எனினும் இவ்வாறான கோப்புக்களில் எடிட் செய்ய வேண்டிய தேவை ஏற்படின் நேரடியாக PDF
கோப்புக்களில் வைத்து இதனை மேற்கொள்ள முடியாத காரணத்தால் அவற்றினை Text கோப்பாக
மாற்ற வேண்டியது அவசியமாகும். இச்செயன்முறைக்கு PDF to Text Converter எனும் மென்பொருளானது பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. இம்மென்பொருள் மூலம் தனிப்பட்ட ஒரு கோப்பினையோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட கோப்புக்களினையோ மிகவும் இலகுவான முறையில் ஒரே நேரத்தில் Text கோப்பாக மாற்றியமைக்க முடியும். அத்துடன் ஒரு கோப்பின் குறிப்பிட்ட சில பக்கங்களையோ அல்லது அனைத்து பக்கங்களையுமோ Text மாற்றியமைக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது. மேலும் இம்மென்பொருளின் செயற்பாட்டிற்கு Adobe Acrobat Reader மென்பொருளோ அல்லது எந்தவிதமான Print Driver மென்பொருட்களோ கணனியில் நிறுவப்பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை |
Tags :
இணைய செய்திகள்
Powered by Blogger.