அற்புதமான நாள் பங்குனி உத்திரம். இந்த தினத்தின் சிறப்புகள் அதிகம்

ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவது வழக்கம். ஆனால் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களை
 விட அதிக மகத்துவமும், முக்கியத்துவமும் உண்டு. தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என
 புராணங்கள் விவரிக்கின்றன.
மேலும் தமிழில் 12வது மாதம் பங்குனி. அதேபோல் நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் உத்திரம். அதாவது 12-வது மாதமான பங்குனியும் 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் அற்புதமான நாள் பங்குனி உத்திரம். இந்த தினத்தின் சிறப்புகள் அதிகம். அவற்றை
 நோக்குவோம்
ஸ்ரீராமபிரான்-சீதாதேவி, பரதன்-மாண்டவி, லட்சுமணன்-ஊர்மிளை, சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நன்னாள் பங்குனி உத்திரம். முருகப் பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். ஸ்ரீவள்ளி அவதரித்த தினமும் இதுதான் என்கிறது புராணம். தேவேந்திரன், இந்திராணி திருமணம் நடைபெற்ற நாள் எனவும் புராணங்கள்
 குறிப்பிடுகின்றன.
இந்த நாளில் விரதம் மேற்கொண்ட சந்திரன், அழகு மிக்க 27 கன்னியரை மனைவியாகக் கொண்டதாகவும், விரதம் மேற்கொண்ட ஸ்ரீமகா லட்சுமி, விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பாக்கியத்தைப் பெற்ற நாளாகவும் புராணங்கள் கூறுகின்றன. மேலும் ஸ்ரீபிரம்மா,
 தன் நாவில் சரஸ்வதியை வரித்துக் கொண்ட தினம், பங்குனி உத்திரம் என்பர். ஐயன் ஐயப்ப சுவாமியின் முந்தைய அவதாரமான சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில் என்கிறது
 சாஸ்தா புராணம். அர்ஜுனன் அவதரித்தது, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்-ரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்த திருநாள் பங்குனி உத்திரம் என்கிறது ஆண்டாள் புராணம்.
அத்துடன் தனது தவத்தைக் கலைத்த மன்மதனை சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர்
 தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு மனமிரங்கிய சிவபெருமான், மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்தருளினார். அது பங்குனி 
உத்திர திருநாளில்தான் என்கிறது சிவபுராணம்
. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக் கோலத்தில்
 பரமேஸ்வரன் பார்வதிதேவியுடன் காட்சி தந்தது இந்த நாளில்தான். காரைக்கால் அம்மையார் பங்குனி மாதத்தில்தான் முக்தி பெற்றார். இவ்வாறான பல சிறப்புக்கள் இந்த பங்குனி
 உத்தரத்திற்கு உண்டு.
எனவே இந்த பங்குனி உத்தர பூஜையைகளை ஆலயங்களில்  தரிசித்தால் எல்லா வளமும் பெறலாம் என்கின்றனர் சிவாச்சார்யர்கள். மேலும் சந்திர தோஷம் யாவும் நீங்கிவிடும் எனவும் சந்திர பலம் கொண்டு மனோபலம் கிடைக்கப் பெற்று மனத்தெளிவுடன் வாழலாம் என்பதும் 
பக்தர்களின் நம்பிக்கை.,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிராயச்சித்த அபிஷேகம்.22.03.18

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய பிராயச்சித்த அபிஷேகம் நடை இன்று. 14ம் நாள் மாலை  22.03.2018வியாழக்கிழமை 
இரவு அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின் ஆலய பிராயச்சித்த அபிஷேகம் நடை பொற்றது
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் பிராயச்சித்த அபிஷேகம் நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>




நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா.22.03.18

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம் தேர் திருவிழா. 14ம் நாள் பகல். 22.03.2018 வியாழக்கிழமை இன்று.
அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின் தேர் திருவிழா நடை பொற்றது பல கிராமங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர் பக்தர்கள் வெள்ளத்தில் தேரில் உலா வந்தார்கள்
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் தேர் திருவிழா நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>






நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் 13ம் நாள் இரவுத்திருவிழா 21.03.18

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில்  அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான் 
அருள்மிகு  ஸ்ரீ மாணிக்க  பிள்ளையார் ஆலய  வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-  
21-03-2018. இன்று.ஆலய 13ம் நாள் இரவு சப்பறத்திருவிழா  மெய் அடியார்கள்  கூட்டத்துடன்   ,மிகவும் சிறப்பாக 
 நடை பெற்றது 
 அதன் புகை படங்கள் இணைப்பு
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>








நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் 13ம் நாள் பகல் திருவிழா 21.03.18

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில்  அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான் 
அருள்மிகு  ஸ்ரீ மாணிக்க  பிள்ளையார் ஆலய  வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-  
21-03-2018. இன்று. ஆலய 13ம் நாள் பகல் திருவிழா  மெய் அடியார்கள்  கூட்டத்துடன்   ,மிகவும் சிறப்பாக இன்று.
 நடை பெற்றது
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>



நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் 12ம் நாள் இரவுத் திருவிழா 20.03.18

லங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில்  அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான் 
அருள்மிகு  ஸ்ரீ மாணிக்க  பிள்ளையார் ஆலய  வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-  
20-03-2018. இன்று.  12ம் நாள் இரவு  திருவேட்டைத்திருவிழா
  மெய் அடியார்கள்  கூட்டத்துடன்   ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது
அதன் புகை படங்கள் இணைப்பு
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>










>

பிறந்தநாள் வாழ்த்து திரு திரும.தி தவபாலன்.20.03.18

யாழ்பாணத்தை  பிறப்பிடமாகவும் தற்போது சுவிஸ்சை வசிப்பிடமாக உள்ள திரு திருமதி தவபாலன் (சாந்தி ) அவர்களின்
  பிறந்தநாள் 20.03.2018.இன்று
 பிறந்தநாள் காணும் இவரை  அன்பு கணவர் அன்பு பிள்ளைகள்   அன்பு  அம்மா,மாமா மாமி  சகோதரர்கள் மருமக்கள்  
மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்
இவ்உறவை  நல்லுர்கந்தன் இறை அருள்பெற்று நோய் நொடி இன்றி  பிறந்த தினமான இன்றும்என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று
  அன்பிலும் அறத்திலும் நிறைந்து   சீரும்சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் 12ம் நாள் பகல் திருவிழா 20.03.18

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில்  அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான் 
அருள்மிகு  ஸ்ரீ மாணிக்க  பிள்ளையார் ஆலய  வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-  
20-03-2018. இன்று. ஆலய 12ம் நாள் பகல் திருவிழா  மெய் அடியார்கள்  கூட்டத்துடன்   ,மிகவும் சிறப்பாக இன்று.
 நடை பெற்றது
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>


மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய பங்குனித் திங்கள் பொங்கல்

யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தின் பங்குனித் திங்கள் பொங்கல் இன்று நடைபெற்றது.
ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பெருமைபெற்று விளங்குவது மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயமாகும்.
யாழ். குடாநாட்டில் உள்ள வரலாற்றுப்புகழ் பெற்ற கண்ணகி ஆலயங்களுள் ஒன்று. இது யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில், சாவகச்சேரி-புத்தூர் வீதியில் உள்ள மட்டுவில் கிராமத்தில் அமைந்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான அடியார்கள்
குடாநாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருமளவிலான மக்கள் வருகைதந்து பொங்கல் செய்து படையல்
 செய்தார்கள்.
அடியவர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதற்காக காவடி, தூக்குக் காவடிகள் குடாநாட்டின் பல பாகங்களில் இருந்தும் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தை வந்தடைந்துள்ளன.
பன்றித்தலைச்சி அம்மன் ஆலயம் மிகவும் பழைமை வாய்ந்த வரலாற்றை அறிய முடியாது போயினும் ஆயிரத்தி 750 ஆம் ஆண்டு நாகர் கதிர்காமர் என்பவராக கட்டப்பட்டதாக யாழ் மாவட்ட செயலகத்தின் பதிவுகள் வெளிக்காட்டுகின்றன.
சித்தர்களால் வழிபடப்பெற்ற ஆலயம் பன்றித்தலைச்சி ஆலயம் என வரலாறுகள் கூறுகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





Powered by Blogger.