5000 கடிதங்கள் தபால்காரரின் வீட்டு நிலத்தடி அறையில் கண்டு பிடிப்பு

07.08.2012.


வரும் தை முதலாம் திகதியில் இருந்து டென்மார்க்கில் உள்ள தபால் பெட்டிகள் வீடுகளின் முன்புறமாக வைக்கப்பட வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வருவது தெரிந்ததே. அதேவேளை டென்மார்க்கில் உள்ள நோவ சுன் புய் என்ற நகரத்தில் முன்னாள் தபால் ஊழியர் ஒருவரின் வீட்டில் இருந்து சுமார் 5000 பட்டுவாடா செய்யப்படாத தபால்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. வீடுகளில் போட வேண்டிய தபால்களை முறைப்படி பட்டுவாடா செய்யாமல் தனது வீட்டு நிலத்தடி அறையில் போட்டுவிட்டு இவர் தபால்காரர் சம்பளம் எடுத்து சீவித்துள்ளார். இந்த தபால் ஊழியர் 2006 – 2008 வரை தபால் திணைக்கள ஊழியராக இருந்து பின் பதவி நீக்கப்பட்டுள்ளார். 2007 முதல் 2008 வரை அனுப்பப்பட்ட தபால்களை வீட்டில் போட்டுவிட்டு வேலையை வெற்றிகரமாக முடித்திருக்கிறார். இப்போது இவர் வாடகைக்கு இருந்து வெளியேறிய வீட்டை துப்பரவு செய்த ஊழியர் இந்தத் தபால்களை கண்டெடுத்து போலீசாருக்கு அறிவித்துள்ளார். இவருடைய செயல் பாரதூரமான குற்றமாகும் என்பதால் போலீசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தபாலை பெறாத காரணத்தால் உரியவர்கள் அடைந்த நஷ்டம் கணக்கீடு செய்யப்பட்டால் குற்றம் கிரிமினல் குற்றங்களின் அதி உச்ச நிலையை அடைய வாய்ப்புள்ளது. வடக்கு யூலன்ட் பிரிவு தபால் திணைக்கள பொறுப்பாளர் மரியானா கொலம்ஸ்கோட் இந்த அவல நிலைக்காக தமது கவலையை தபால்களை பெறாதவர்களுக்கு தெரிவித்துள்ளார். இந்தத் தபால்கள் உரியவர்களிடம் சேர்க்கப்பட்டால் அவர்கள் நஷ்ட ஈடு கோருவதற்கு முயலலாம்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.