நந்தியின் குறுக்கே செல்வதை தடுப்பது ஏன்?



சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர். இதற்கு காரணம் உண்டு.

நந்தி கர்ப்பக் கிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். இது சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவ ஆத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த

கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார். ஆகவே பக்தர்கள் நந்தியின் குறுக்கே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது கடவுளை அடைய நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும்.

சன்னதியை மறைத்து நிற்காதீர்கள் என சொல்வதும் இதனால் தான். மேலும் நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே நாம் கோயிலுக்குள் நுழைய வேண்டும். மீறிச் செல்பவர்கள் ஏதோ கோயிலுக்குள் போய் வந்ததாக

கணக்கில் கொள்ளப்படுமே தவிர, இறைவனின் அருள் அவர்களுக்கு கிட்டாது.
அது மட்டுமல்ல, இறைவனில் முதல்வன் விநாயகர். கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரர். எனவே தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக்கப்படுகிறது.
 : இந்து மத வரலாறு -

அதிசயங்களை நிகழ்த்தும் ஏழுமலையான்...


திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை. வெள்ளிக்கிழமைகளிலும் மார்கழிமாதத்திலும் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. சிவராத்திரி அன்று ÷க்ஷத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப் பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய

ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்தப் பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதி கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்ன மய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர் மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமலையான் மீது சேஷாசல நாமம், வராளி ராகத்தில் பாடியுள்ளார். அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது

 மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்ற ஐதிகம் உள்ளது.
ஏழுமலையானின் ஸ்தல விருட்சம் புளிய மரம். ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒருநாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது. ஏழுமலையானின்

அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்றபடியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விட வேண்டும். இது விசேஷ வழிபாடாகும். வெள்ளிக் கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும். வடகலை சம்பிரதாயத்தில்

வேங்கடமெனப்பெற்ற என்ற பாசுரமும், தனியன்களும் இடம்பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

ஸ்ரீ ராமர் வழிபாடு ..

..
நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
 தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
 சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
 இன்மையை ராம வென்றிரண்டெழுத்தினால்.

உருவச் சிலையில் நேர்த்திக்கடன்


எல்லா கிராமங்களுக்கும் ஒரு காவல் தெய்வம் உண்டு. அந்தக்காவல் தெய்வமே பலருக்கு குல தெய்வமாகவும் இருக்கும்.  அம்மனே இது போல் காவல் தெய்வமாக இருப்பதைப் பார்க்கிறோம்.  வீரகாளியம்மன், மாகாளியம்மன் மாரியம்மன், கருமாரியம்மன், அங்காள பரமேஸ்வரி போல் பலருண்டு.

இதேபோல் முனீச்வரன், கருப்பண்ண சாமி, முத்துக்கருப்பன் என பல ஆண் தெய்வங்களும் உண்டு.  சில கிராமங்களில் சாதரணமாக வாழ்ந்து வரும் ஒரு சிலர் தங்கள் ஊருக்காகவோ அல்லது  வேறு  எதாவது விதத்தில்  தியாகம் செய்து உயிர்விட அவர்கள் நாளடைவில் அங்கு இருக்கும் மக்களுக்கு தெய்வமாக ஆகிவிடுவதுண்டு. இதில் ஆண்களும் பங்கு பெறுகிறார்கள். சில சமயம் இரு சகோதரர்கள் அல்லது  சகோதரிகள் சேர்ந்தே எல்லைத்தெய்வமாக இருப்பதும் உண்டு.

குமரிமாவட்டம் முன்பு கேரளாவுடன் சேர்ந்திருந்தது. அங்கிருந்த பலர் மலையாள சம்பிரதாயங்களை வழிபட்டு அந்த மொழியும் பேசிவந்தனர். அப்போது அங்கு ஆண்டு வந்த வேணாட்டு மன்னன் உறவில் இரு சகோதரிகள் தங்கள் நாட்டையும் குலத்தையும் மிகவும் நேசித்தனர். இரு சகோதரிகள் குணமும் மிகவும் வித்தியாசமானது தான். தங்கையின் கோபம் அக்காளிடம் இல்லை. அக்கா மிகவும் சாந்தக் குணமுடையவள். ஆனால் தங்கை உக்ரமானவள்.

ஒரு சமயம் தங்கள் குல மானம் காத்துக்கொள்ள தங்கள் உயிரையும்  அவர்கள் கொடுக்கத் துணிந்தனர். அவர்கள் தற்கொலை மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. தங்கள் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு செத்தனர். தற்கொலை ஆனதால் பூலோகத்திலேயே சுற்ற நேர்ந்தது. அந்த ஊர் மக்கள்

 அவர்கள் இருவருக்கும் தெய்வ பதவியை அளித்து கும்பிடத் தொடங்கினர். அவர்களும் பதுமநாபபுரம் அரண்மனை அருகில் இருக்கும் வயல்கள் தவிர சுற்றுச்சூழலிலும் நடமாடத்தொடங்கினர். சிலர் பேய் என்று பயந்தனர். 

ஒரு நாள் இவர்கள் வந்துக்கொண்டிருந்த போது வேணட்டு மன்னர் ஒருவர் தன் கோட்டை வாயிலில் நின்று இயற்கையை ரசித்துககொண்டிருந்தார்.  அழகிய தென்றல் வீசிக்கொண்டிருந்தது  அந்த நேரம்  இரு சகோதரிகள்  அங்கு  உக்ரமாகக் கூச்சலுடன் கத்தியபடி வந்தனர்.

'யார் நீ ? இங்கு என்ன செய்கிறாய்?" என  மன்னரைக்கேட்டனர்
மன்னரும் "நான் பத்மநாமதாசர்" என்று கண்களை மூடிக்கொள்ள இந்த சகோதரிகளைப்பற்றி எல்லாம் அவருக்குத் தெரிந்தது.

"சகோதரிகளே! குலப்பெருமையைக் காத்த நீங்கள் இந்தக் கிராமத்திற்கே தெய்வமாக ஆகிவிட்டீர்கள். ருத்ரமாக ஆகாமல் சாந்தமாகிவிடுங்கள். உங்களுக்கு மேலாங்கோட்டில் ஒரு ஆலயம் அமைத்து  தருகிறேன்" என்றார்.
சகோதரிகளும் ஒத்துக்கொண்டனர்.

அவர் சொன்னபடி ஆலயமும் அமைந்தது. அன்றைய தினத்திலிருந்து மேலாங்கோட்டு இசக்கியம்மன் காவல் தெய்வமாக ஆகி எல்லோரையும் காத்து வருகிறாள்.

அன்றையதினத்திலிருந்து மழலைச்செல்வம் வேண்டி  நிற்பவர்கள் , நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள். என்ன நேர்த்திக்கடன் செய்வதாக வேண்டுகிறார்கள்  தெரியுமா?  தங்கள் கொடிய நோய் நீங்கினதும்  இசக்கி அம்மன் போல் உருவச்சிலை செய்து வைப்பதாக வேண்டிக்கொள்கிறார்கள். எல்லோரையும் காத்து அருள் புரிகிறாள் இசக்கி அம்மன். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறியதும் பக்தர்கள் இரு சகோதரிகளின் சிலைப்போல்  செய்து  தங்கள் நேர்த்திக்கடனைச்செலுத்தி விடுகிறார்கள்.

பிறந்த நாள் வாழ்த்து .சி: உதயகுமார்

 
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட  சுப்பிரமணியம் உதயகுமார் அவர்களுக்கு  இன்று(24:09:2013) பிறந்தநாள். இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள் தங்கைமார் குடும்பம், தம்பி சன்குடும்பம்,இவர்களுடன். .
யேர்மனியில் வசிக்கும் கந்தசாமி  குடும்பம்,  குமாரசாமி குடும்பம், தேவராசாகுடும்பம், ஐெயக்குமார் குடும்பம்,

தவராசா குடும்பம் ,தவேஸ்வரி குடும்பம், மற்றும் சந்திரன் குடும்பம், சிவக்கொழுந்து பெரியம்மா ,கணேசன்கு டும்பம், ஸ்ரீ குடும்பம்,   ஆனந்தன்குடும்பம், கௌரிகுடும்பம், கோடீஸ்வரன் குடும்பம்,

சாந்தலிங்கம் குடும்பம், சுவிஸ் தேவன் குடும்பம் எமது  நவற்கிரி இணையங்களும் மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள்  என்றும் முத்துமாரி அம்பாள்  சிறுப்பிட்டி ஞான வைரவர் திருவருள் பெற்று ,  பல்லாண்டு காலம் சகல  வளமும் பெற்று  நீடூழிவாழ்க  வாழ்த்துகின்றனர்

அன்னை அபிராமி தேவி



மின்னாயிரம் ஒரு மெய்வடிவு
 வாகி விளங்குகின்ற
 தன்னால் அகமகிழ் ஆனந்த
 வல்லி அரும்மறைக்கு
 முன்னாய் நடுவெங்கு மாய்முடி
வாய முதல்விதன்னை
 உன்னாது ஒழியினும் உன்னிலும்
 வேண்டுவது ஒன்றில்லையே....பல ஆயிரம் மின்னல்கள் வடிவெடுத்து ஒளிர்வது போன்ற திருமேனியுடையவள் அன்னை அபிராமி தேவி
 அடியார்களின் மனமகிழ்ச்சிக்கு மூல காரணம் ஆனந்தவல்லி
 வேதத்தின் ஆதியாகவும் ,இடயாகவும் முடிவாகவும் விளங்குகின்ற முதல்வி .போற்றி வணங்கிடுவோம்
             .அன்பான வணக்கம்

புரட்டாசி சனி விரதம் ஆரம்பிக்கிறது!

 
தமிழ்பகுதிகளைப் பிடித்த சனி விட்டுத் தொலைந்து போகவேண்டும்!!
எதிர் வரும்.21.09.2013. சனிக்கிழமை புரட்டாசி சனி விரதம் ஆரம்பிக்கிறது!
உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் இந்துக்கள் தொடர்ந்து நான்குவாரங்களுக்கு இவ்விரதத்தை கடைப்பிடிப்பார்கள். குறிப்பாக ஈழம் வாழ்கின்ற சைவர்கள்

 இதனை பிரதானமாக அனுட்டிப்பார்கள்! பிடித்த சனி விட்டுப் போகவேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கும் இத் தினத்தில்தான் எமது மண்ணிலே தேர்தல் நடைபெறவிருக்கிறது. தமிழ் பகுதிகளைப் பிடித்த சனி விட்டுத்

தொலைந்து போகவேண்டும் என்று வெளிநாடுகளில் இருக்கின்ற நாமும் இந்த புனிதமான நாளை சனிபகவானுக்கு வேண்டி பிரார்த்தனை செய்வோமாக

ராஜராஜேஸ்வரி ஒரு சிறுமி வடிவத்தில்


: போன வாரம் ஒரு வேலையாக பவழந்தாங்கல் போக நேர்ந்ததால் அது அருகில் இருக்கும் ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலுக்கும் போகும் வாய்ப்பு கிடைத்தது. பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிமீ தூரத்தில் இந்தக்கோயில் அமைந்திருக்கிறது.
அங்கு எல்லோருக்கும் இந்தக்கோயில் தெரிந்திருப்பதால்   மிக எளிதாக போகமுடிகிறது  நேரு காலனி என்ற இடம் வர இந்தக்கோயிலைக் காணலாம்   இந்தக்கோயிலில் அமர்ந்து அருள் பாலிக்கும் அன்னை  ஸ்ரீவித்யா

ராஜராஜேஸ்வரி .......இவள் இங்கு அமர்ந்து அருள் புரிகிறாள்.  இந்த அம்பாள் இங்கு வந்து கோயில் கொள்ள வேண்டும் என்று உணர்ந்தவர் நம்  மகா பெரியவாள் அவர்கள் தான். அவர்தான் ஜகத்குரு  ஸ்ரீ சந்த்ரசேகர சரஸ்வதி  சுவாமிகள் பலவருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்........சுவாமிகள் பரங்கிமலைக்கு  பாத யாத்திரை மேற்கொண்டு பக்தர்கள் குழுவுடன் வந்துக்கொண்டிருந்தார். ஸ்ரீ. நந்தீஸ்வரர் கோயில் பரங்கிமலையில் இருக்கிறது.

வரும் வழியில் திரிசூலம் என்ற இடத்தில் திரிசூலநாதர், அம்பாள் திரிபுரசுந்தரியைத் தரிசித்து  வரும் போது பவழந்தாங்கல் என்ற இடம் வந்தது. அங்கு பெரிய அரசமரம் நிழல் கொடுத்துக் கொண்டிருக்க சுவாமிகள் அந்த இடத்தில் களைப்பாறினார். அவர் ரெஸ்ட் எடுக்கட்டும் என்று பகதர்கள் குழு சற்று நகர்ந்து  நின்றுவிட்டனர். மகாபெரியவாள் தனித்துவிடப்பட்டார். திடீரென்று அந்த மகானுக்கு நாக்கு காய்ந்து போக நாவரண்டு விட்டது அவர் தன் சன்னமான குரலில் ஒரு சிஷ்யரை அழைத்தார். ஆனால் அவருக்குக்காதில் விழவில்லை.

அந்த நேரத்தில் சின்னப்பெண் கையில் சொம்புடன் வந்து நின்றாள்
"மஹாபெரியவரே இந்தாருங்கள்  தண்ணீர் கேட்டீர்களே நான் கொண்டுவந்திருக்கிறேன். நீர் அருந்துங்கள்" என்றபடி சொம்பை நீட்டினாள். அவரும் நீரைப்பருகியபிறகு  சொம்பைக்கொடுக்க அவளைப்பார்த்தபோது அந்தச்சிறுமி அங்கில்லை.

உடனே தன் சிஷ்யரை அழைத்து "நீங்கள் தண்ணீர் சொம்புடன் அனுப்பிய பெண் எங்கே?" என்று கேட்டார்
சிஷ்யர்களுக்கு ஒரே வியப்பு..!

"எங்களுக்கு ஒன்றுமே தெரியாது நாங்கள் ஒரு சிறுமியையும் அனுப்பவில்லையே "என்றனர் .
உடனே தியானத்தில் ஆழ்ந்த சுவாமிகள் வந்தது ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரி என்பதை உணர்ந்தார்.

பின் அங்கிருந்த பக்தர்களை அழைத்தார்.
"இங்கு எங்கேயோ  அம்பாள் புதைந்திருக்கிறாள் அவளை எப்படியேனும் வெளியே கொண்டு வந்து கோயில் கட்டுங்கள்" என்றபடியே தன் பாத யாத்திரையைத் தொடர்ந்தார்.

பழழந்தாங்கல் மக்களும் ஒருமனதாக அந்த இடத்தைத்தோண்ட கிடைத்தது ஒரு அம்பாள் விக்கிரஹம். குழந்தை வடிவில் இருந்தது. மேலும் தோண்ட இன்னொரு அம்மனும்  கையில் தட்டுப்பட  அவள் சண்டிகேஸ்வரி யாக இருந்தாள்.

எல்லோருக்கும் பரம சந்தோஷம். மஹாபெரியவாளிடம் அவர்கள் விஷயத்தைச்சொல்ல   அவர் விக்ரபிரதிஷ்டை செய்ய வந்து அம்பிகைக்கு "ஸ்ரீவித்யாராஜராஜேஸ்வரி" என்ற நாமம் சூட்டினார்.
பின் என்ன கொஞ்சம் கொஞ்சமாக கோயில் கட்டும் பணி தொடர்ந்து கருவறை முன் மண்டபம் பரிவார தேவதைகள் எல்லாமே மகாபெரியவாள் சொற்படி அமைக்கப்பட்டு இன்று எல்லோருக்கும் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள்.

அவளைப்பார்க்க வேண்டுமானால் குறுகிய இடத்தில் படிகள் ஏறி  மேலே செல்ல வேண்டும் ஐயப்பன் கோயில் படிகள் போல் ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு தேவதை இருக்கிறாள். மேலே அம்பாளின் அழகே அழகு. வர்ணிக்க வார்த்தைள் இல்லை.

அந்தக் கண்களை சொல்லவா புன்னகிக்கும் உதடுகளைச்சொல்லவா நீண்ட நேர்த்தியான நாசியைச்சொல்லவா .......எல்லாமே அத்தனை அழகு. நிச்சியமாக ஒரு தனி சக்தி நம்மேல் பாய்வதை உணர முடிகிறது, மாசி மாதம் அந்த ஆதவனும் ஆறு நாட்கள் காலை ஆறுமணிக்கு அம்பாள் மேல் தன் கிரணங்களைப்பாய்ச்சி வணங்குகின்றான்.
அம்பாள் அப்போது ஜ்வலிக்கும் அழகே அழகு!

இந்த நேரத்தில் சூரிய வழிபாடு என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது
சிவன் கோயிலில் சண்டிகேஸ்வரர் இருப்பது போல் இங்கு சண்டிகேஸ்வரி அமர்ந்திருக்கிறாள். குழந்தை பாக்கியம், கல்வி செல்வம் என்று பல வழங்கி பிரச்சனைகளையும் தீர்த்துவைக்கும் ராஜராஜேஸ்வரியை நாமும் தரிசித்து வணங்கி அவள் அருளைப்பெறலாமே

விநாயகர் சதுர்த்தி பற்றிய தகவல்

 
 சரியான தகவல்களைத் தெரிந்துகொள்ளாமலே எம்மில் பலர் சதுர்த்திவிரதம் பிடிக்கின்றோம். சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றோம். சதுர்த்தி பற்றிப் பேசுகின்றோம். விநாயகர் சதுர்த்தி பற்றிய தகவல்களைச் சிறு

தொகுப்புக்களாக வெளியிட மிக்க ஆவல். எட்டாவது பகுதியை இன்று பார்க்கலாம். இதன் தொடர் பகுதிகளாகத் தினமும் வெளியிடப்படும்.
ஓம் சிறீ மஹா கணேஷ நமக.
விநாயகர் சதுர்த்தி நேற்றைய தொடர் (08:10)

அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள். சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை

சொன்னார். அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள். அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள். ஆவணி மாத

அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள். அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள்.

அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள். விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு,

சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார். அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது.

அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை. அவரைப் பொறுத்தவரை புல் மாலை போட்டவரும் ஒன்றுதான்; ரோஜா மாலை போட்டவரும் ஒன்றுதான். வித்தியாசமே பார்க்க மாட்டார்.

தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார். விநாயகர் சதுர்த்தி விரத நடைமுறைகள் என்னென்ன?

அன்றைய தினம் விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்கலாம்
Powered by Blogger.