தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய தேர்த்திருவிழா

வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று 27.08.2015.வியாழக்கிழமை இடம்பெற்றது. அதிகாலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் 
தொடர்ந்து அடியவர்களின் அரோகரா கோஷத்தின் மத்தியில் அம்பாள் அழகிய திருத்தேர் ஏறி 
அடியவர்களுக்கு காட்சியளித்தாள். யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலும் இருந்து இடம்பெற்ற இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் மினிபஸ் வண்டிகளின் சேவையுடன் அதிக எண்ணிக்கையான பக்தர்கள் தேர்த் 
திருவிழாவில் கலந்து கொண்டார்கள். அத்துடன் புலம்பெயர் நாடுகளில் இருந்து வருகை தந்த அதிகளவு பொதுமக்களும் கலந்து கொண்டார்கள். பக்தர்கள் கற்பூரச் சட்டி எடுத்தும் அடி அளித்தும் 
அங்கப்பிரதட்சை செய்தும் தூக்கு காவடிகள் பறவைக்காவடிகள் மற்றும் சப்பாணிக் காவடிகள் எடுத்தும் தமது நேர்த்திகளை நிறைவுசெய்தார்கள்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாரில் இருந்து ஸ்ரீ செல்வச்சந்நிதிமுருகனுக்கு பவனி

யாழ் ஸ்ரீ செல்வச்சந்நிதிமுருகன்  பத்தாம்10 வது நாள் பூங்காவனத்  திருவிளவை முன்னிட்டு அடியார்கள் கூட்டம்  அலைமோத .நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாரில் இருந்து அடியார்கள் தங்கள் நேர்த்தி வேண்டி பால்குடங்கள்  ஆட்டகாவடிகள்   நடை பவனியகவும்   தூக்கு காவடிகள் உளவு இயந்திரத்திலும்   புறப்பட்டு  எம்பெருமான் கந்தன் காலடி நோக்கிய   பவனியின் நிழல்படங்கள்  காணொளி இணைப்பு 




















திருமண வாழ்த்துக்கள் திரு திருமதி சஞ்சய் தம்பதிகள்

சுவிஸ்  சூரிசை பிறப்பிடமகவும்  வசிப்பிடகமகவும்  கொண்ட திருகணேசலிங்கம்  சஞ்சய் அவர்களின் திருமணம் 
இறை அருள் கூடிய வேலையில் இனி தாய் நிகழ்ந்த திரு திருமதி சஞ்சய் தம்பதிகளின் திருமணம்
தாயகத்தில் நடை பெற்றது இவரை  அன்பு  அப்பா  அம்மா  மாமா மாமி சகோதரர்கள் 
குடும்ப உறவுகள் நண்பர்கள் மற்றும் நவககிறி .கொம்  நிலாவரை .கொம் இணையங்களும்  இந்தஉறவை  ஆல் போல் தளைத்து அறுகுபோல் வேருன்றி பத்தும் பதினாறும் பெற்று இன்பமாய்  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் .








நல்லை க் கந்தன் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது (நிழல் படங்கள் இணைப்பு)

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.கொடியேற்றம் காண காலை முதல் பக்தர்கள் ஆலயத்தின் உட்புற மண்டபத்தில் கூடத் தொடங்கினார்கள். 
அந்தணர்களின் வேதமந்திர பாராயணம் ஒலிக்க அடியார்களின் அரோகரா கோஷம் முழங்க இன்று காலை 10 மணிக்குக் கொடியேற்றம் இடம்பெற்றது.
யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வெளிநாடுகளிலிருந்து விடுமுறையில் திரும்பியுள்ள புலம்பெயர் உறவுகளும் கந்தனைத் தரிசிக்க திரண்டு வந்திருந்தனர். ஆலய சுற்றாடலில் பாதுகாப்புக் கடமையில் சீருடையிலும் சிவில் உடையிலும் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்
. நூற்றுக்கணக்கான அடியார்கள் வயது வேறுபாடுகள் இன்றி அங்கப்பிரதட்ணம் செய்தார்கள்.
இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் உற்சவம் தொடர்ந்து 25 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. செப்ரெம்பர் 11ஆம் திகதி காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும் மறுநாள் காலை 7 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது. 









ஸ்ரீ ஆதிபராசக்தியின் அதி அருள் சூட்சம வடிவான இந்த ஸ்ரீ சக்கரம்

அம்பிகையின் ஸ்ரீசக்கரம் ஒன்பது சுற்றுக்களைக் கொண்டதாகும், நவாவர்ணம் என்பர். ஆவரணம் என்பது சுற்று,அடைப்பு எனப் பொருள் படுவதாகும்.
ஸ்ரீ ஆதிசங்கரர் சௌந்தர்ய லஹரியில், கூறுகிறபடி நாற்பத்தி நான்கு தத்துவங்களாக விளங்குகிற சியாமள சக்கரம் அமைப்பு.
1. பிரகாரங்கள்-3 (சதுரங்கள்)
2. மேகலைகள்-3 (வட்டங்கள்)
3. தளங்கள்-16 (தாமரை இதழ்கள்)
4. சிவ ரூப சக்கரங்கள்-4
5. சக்தி ரூப சக்கரங்கள்-5
6. மூலகாரண தாதுக்கள்-9
7. பிந்துஸ்தான மந்திரகோணங்கள்
8. எட்டுத் தளங்கள்(தாமரை இதழ்கள்)
என்று மஹாசக்திப் பிரவாகமாக விளங்கும் ஸ்ரீசக்கரம் சூக்ஷமமான வடிவிலுள்ளதாகும். இதைப் பெரியோர்கள் மூலம் அறியத்தக்கதாகும்.
ஒன்றின் கீழ் (ஒன்றுக்குள் ஒன்றாக) ஒன்றாய், நேர்கோணங்கள் 4.
தலைகீழ் (ஒன்றுக்குள் ஒன்றாக) ஒன்றாய் முக்கோணங்கள் 5.
முக்கோணங்கள் 14
வெளிமுக்கோணங்கள் 10
உள்முக்கோணங்கள் 10
நடுமுக்கோணம் 1 (சிறியது)
ஒரு புள்ளி 1 (சிறுமுக்கோண நடுவில்)
சிவகோணம் முன் பகர்வது ஒரு நாலு சக்தி நெறி
செறிகோணம் அத்தொடு ஒரு மருவு கோன்
நவகோணம் உட்படுவது எழுமூ இரட்டி ஒரு
நவில் கோணம் உற்றதுவும் வலயமாய்
இவரா நிரைத்;த தளம் இருநாலும் எட்டுஇணையும்
எழிலாய வட்ட மொடு சதுரமாய்
உவமானம் அற்ற தனி தனி மூவகைக்கணும் என்
உமை பாதம் உற்ற சிறு வரைகளே.
லோக நாயகி யோக நாயகியாய், யோக நெறியின் விளக்கமாக உள்ளதே ஸ்ரீ சக்கரம் என்பா.; யோக தத்துவங்களின் விளக்கங்களாக அந்தக்கரணம், மன விருத்திகள், என எண்ணப்பரவல்களின் நிலைப்பாடு, குறித்து மேம்படுத்தும் நிலையாகும்.
3 சதுரப் பிரகாரங்களில் ஒன்றான சித்த விருத்தி (மனமாறுதலை அடக்கி விகாரம் இல்லாமல் செய்தல்) யோகமாகும்.
மூன்று குணங்களாகிய சத்வ குண, தமோ குண, ரஜோ குண நிலைகளை மாற்றி சத்வகுண மேம்பாட்டை ஏகாக்ரஹ சிந்தையை வைராக்ய நிலையில் வைத்திருக்கும் போது கிடைக்கும் அட்டமா சித்திகளைப் பெறச் செய்யும்
அணிமா, மகிமா லஹிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசித்வம் வசித்வம் ஆகியவற்றை அளிக்கும் 8 தேவதைகளும், காமம், குரோதம், மோஹம், லோபம், மதம், மாச்சர்யம், புண்ணியம், பாவம் என்ற 8 தேவதைகளும் அடுத்து ஆதாரங்களான
மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி;, ஆக்ஞை,சகஸ்ராரம், பரவெளி என 8 ஆதார சக்தி தேவதைகளும் 3 மேகலையாக விழிப்பு, உறக்கம், கனவு, வீடு, மோட்ஷம் என்பது சுத்த சைதன்ய ரூபமான புருஷனுக்கு அந்தக்;கரணம் முதலிய உபாதிகள் விலக்கி அவனது உண்மையான ஸ்வரூபத்தில் நிலை பெறச்செய்த நிலையில் தன்னையும் தன்னுள் அடங்கிய மஹாசக்தியை வெளிபடுத்தி உலகை உய்யச் செய்யும் ஸ்ரீ ஆதிபராசக்தியின் அதி அருள் சூட்சம வடிவே இந்த ஸ்ரீ சக்கரமாகும்

துர்க்கை அம்மன் மகோற்சவம் இன்று ஆரம்பம்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று(17.08.2015) கொடியேற்றத்துடன் ஆரம்பம்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பாற்குடபவனி

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பாற்குடபவனி 
.பாற்குடபவனி இன்று 16.08.2015  காலை 7.45 மணியளவில் வண்ணை சிறீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலயத்திலிருந்து  
ஆரம்பமான பாற்குடபவனி   காலை 8.00 மணியளவில் வீரமாகாளி அம்மன் ஆலயத்தை வந்தடைந்ததும்   அம்மனுக்கு பாலாவிசேகமும் விசேட பூசைகளும் நடைபெற்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


நல்லூர் கந்தன்கொடியேற்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி

யாழ் நல்லை கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவத்துக்கான ஏற்பாடுகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்
ஆலயத்துக்குள் நுழையும் நாற்பக்க வீதிகளிலும் பக்தர்கள் இளைப்பாறும் கொட்டகைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆலயத்தில் சுவாமி வீதியுலா வருகையில் விளம்பரப் பதாதைகள் பார்வைக்கு தென்படாத வகையில் ஆலய வெளிவீதி வளாகத்தை சுற்றி ஆலய நிர்வாகத்தினரால் மறைத்துக் கட்டப்படுகின்றது. 
ஆலயத்தின் வெளி வீதியில் மணல் பரப்பும் பணியை மாநகர சபை மேற்கொண்டுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறும் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

Powered by Blogger.