
கடலில் அலைகள் எழுகின்றன. அங்கே நீரிலேயே நீர் எழுவதைக் காண்கின்றோம். அவ்வி தமே மனத்தை மனத்தாலேயே அறியவேண்டும். சிந்தனை அலைகள் மனத்தில் எழுதல் வேண்டும்.
தன்னைத்தானே ஊகித் துணர்தல்
வேண்டும். நமது பிரதிவிம்பத்தை நம்முள்ளே காணல் வேண்டும். உலகிலுள்ள பல்வேறு மாயா சக்திகளைக் கண்டறிந்து வெல்லல் வேண்டும். மனம் மனனம் செய்தல் வேண்டும். அறிந்தவற்றிலிருந்து...