அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்பாள் தீமிதிப்பு

மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்பாள் ஆலய வருடாந்த தீமிதிப்பு உற்சவம் வெகுசிறப்பாக நடந்து முடிந்துள்ளது. நேற்று மாலை பல்லாயிரக்கணக்கான112 பக்தர்கள் குழுமியிருக்க தீமிதிப்பு நடந்தது.
அம்பாளின் சடங்கு உற்சவம் கடந்த 7ம் திகதி ஆரம்பமாகி நேற்று 12ம் திகதி தீமிதிப்புடன் நிறைவடைந்தது.
நேற்று இடம்பெற்ற தீமிதிப்பு உற்சவத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்த அடியார்கள் கலந்துகொண்டு தீ மிதித்தனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள >>>


பிறந்தநாள் வாழ்த்து திருமதி தவரத்தினம் குமாரசாமி [13-06-15]

மானிப்பாயை பிறப்பிட மாகவும்  சிறுப்பிட்டியில் வசிக்கும் திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்களுக்கு எண்பத்தி ஐந்தாவது பிறந்த தினம் இன்றாகும்.இவர் இன்று தனது இல்லத்தில் மிக எளிமையக பிறந்த நாளை கொண்டாடும் இவரை,
இவரது சகோதரர்கள்  , அன்பு பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் ,பூட்டப்பிள்ளைகள்,மற்றும் உறவினர்கள் ,ஊரவர்கள்,வாழ்த்துகின்றனர். இன்னும் பல உறவுகளுக்கு  இந்த அம்மாவை இறைஆசியுடன் சகல வளமுடன் இன்னும் பல ஆண்டுகள்
முதுமையிலும் தனிமை இன்றி…
அன்னையே நீ வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நிலாவரை இணையங்கள் .
 வாழ்த்துகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


செவ்வாய்,வெள்ளி மகிமை சிறந்த கிழமையாகும்!

செவ்வாய் கிழமையை பெரும்பாலனவர்கள் ராசில்லாத நாளாகவும்,வெறும்வாய் என்பார்கள் அது முற்றிலும் தவறாகும்.செவ்வாயை எந்த சாஸ்திரத்திலும் சொல்லவில்லை.அறிவியல் பூர்வமாக இது ஒரு சிறந்த கிழமையாகும்.
செவ்வாய் என்பது சிவந்த வாய் என்பதின் சுருக்கம்.இந்த கிரகத்தின் நிறம் சிவப்பு அத்னால் அந்தகாலத்தில் ரிஷிகள் இந்த பெயரை வைத்தார்கள்.வடஇந்தியாவில் செவ்வாய்க்கிழமையை மங்கலவாரம் என்பார்கள்.இந்த நாளில் பூமி சம்பந்தபட்ட காரியங்கள் செய்யலாம்.விவசாய வேலைகள் செய்யலாம்.மங்கல காரியங்கள்,
 தெய்வ வழிபாடு மேற்கொள்ள இந்நாள் உகந்தது.செவாய் முருகனுக்கு உகந்த நாளாகும்.இந்த நாளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கடைக்கும்.வாழ்வு வளம் பெறும்.
மகாலெஷ்மியின் அம்சம் பொருந்திய கிழமை வெள்ளிகிழமை.இந்த கிழமையில் அம்மனுக்கு விரதம் இருந்தால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.இறந்தவர்களை எழுப்பும் சஞ்சீவி மந்திரத்தை கற்ற சுக்கிரச்சாரியார் அமசம் பெற்றது இந்த கிழமை.
சுப காரியங்கள்,திருமண காரியங்கள்,தெய்வ காரியங்கள் இந்த கிழமையில் செய்வது மிகவும் சிறப்பாகும்.அதேபோல் வெள்ளியில் பெண்குழந்த பிறப்பதும் சிறப்பாகும்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவக்கிரகங்கள் கோயில்களில் இருக்கும் அமைப்பு!

அனைத்து சிவாலங்களிலும்,ஈசானிய மூலையில்(வடகிழக்கு) நவக்கிரகங்கள் மேற்குதிசை முகப்பாக அமைந்திருக்கும்.நடுவில் இருக்கும் கிரகம் சூரியன்.சூரியனுக்கு கிழக்கில் சுக்கிரனும்,மேற்கில் சனியும்,வடக்கில் குரு,தெற்கில் செவ்வாய்,வடகிழக்கில் புதன்,தென் கிழக்கில் சந்திரன்,வட மேற்கில் கேது,தென் மேற்கில் ராகுவும் அமைந்திருப்பர்.
சூரியன் கிழக்கு முகமாக இருப்பார். சந்திரன்-மேற்கு; செவ்வாய்- தெற்கு; புதன்-வடக்கு; குரு-வடக்கு; சுக்கிரன்-கிழக்கு; சனி-மேற்கு; ராகு-தெற்கு; கேது-தெற்கு. இந்த முறையில் அமைந்திருப்பார்கள்.ஒவ்வொரு நவக்கிரகமும் தனித்தலத்தில்தான் தன் வாகனத்துடன் காட்சியளிப்பார்கள்
.சிவாலங்களில் இருக்கும் நவக்கிரகங்கள் பெரும்பாலும் தன் வாகனத்துடன் காட்சியளிப்பதில்லை
நவக்கிரகங்களை 7 முறை கடிகார சுற்றிலும்,2 முறை எதிர் சுற்றிலும் வலம் வந்து வணங்கவேண்டும்.ஏனென்றால் சூரியன் முதலான ஏழு கிரகங்கள் இடமிருந்து வலமாக சுற்றும் ஆனால் ராகு,கேது இரு கிரகங்களும் வலமிருந்து இடமாக சுற்றும்.
பெரும்பாலும் நவக்கிரக ஸ்லோகங்கள் சமஷ்கிருதத்தில் இருக்கும்.அதை அனைவரும் மனனம் செய்து சொல்வது சிரமம்.ஆதலால் கீழ்கண்ட எளிய முறையில் சொல்லலாம்.
சூரியனே போற்றி,சந்திரனே போற்றி,செவ்வாயே போற்றி,புதனே போற்றி,குருவே போற்றி,சுக்கிரனே போற்றி,சனியே போற்றி,ராகு&கேதுவே போற்றி போற்றி என சொல்லிகொண்டே நவக்கிரகத்தை வழிபடலாம்

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி செல்வக்காந்தராஜா-10.06.15

யாழ் பலாலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி செல்வக்காந்தராஜா  [ராஜ &தர்சி]  தம்பதிகளின் திருமண நாள் இன்று.10.06.2015. இவர்களை 
அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள்  அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை பலாலி அம்மன் .திருகோணமலை அம்மன்  இறைஅருள் பெற்று சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன்
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றனர் 



ஆன்மாவை அடைய?ஆன்மீகம் என்றால் என்ன...?

இந்த கேள்வியை நம் பதிவர் தோழி அருணா செல்வம் கேட்டிருந்தாங்க.. அவங்க பதிவில் கருத்தாக போட நினைத்ததை இங்கு பதிவாக போட்டுவிட்டேன். இது எனக்கு தோன்றிய சிந்தனைகள்தான். இதுதான் சரி என்று சொல்லும் அளவிற்கு வயதோ, அனுபவமோ எனக்கு கிடையாது. குற்றமிருந்தால் பெரிது படுத்தாதீர்கள்.
ஒவ்வொரு  மனிதனுக்குள்ளும் வாழ்க்கையின் உயர்நிலையை 
 எட்டி பிடிக்கவேண்டும் என்பதே லட்சியமாக இருக்கிறது. உயர்நிலை என்பது வசதியானவாழ்க்கை..அதில் இன்பம் தருவனவாக நினைப்பது அனைத்தும் புறப்பொருட்கள்தான்!  (வீடு, வாகனம்..இன்னும்பிற)  இந்த புற சந்தோஷங்களை சம்பாதிப்பதிலேயே கடைசி வரை ஓடுகிறான்.எல்லாம் அடைந்து அவற்றால் மகிழ்ச்சியில் திளைத்து இனிமேல் அனுபவிக்க முடியாத   நிலைக்கு கீழே விழும் போது தான் தன்னை பற்றியும்,தனக்குள் இருக்கும் ஆன்மாவை பற்றியும் நினைக்கிறான்.அந்த ஆன்மாவிற்கு இந்த 
புறபொருள் மகிழ்ச்சி எதுவும் தேவைப்பட்டிருக்கவில்லை. அது அறிந்தது பாவம், புண்ணியம் மட்டுமே. அதுகாறூம் தான் செய்த நல்ல செயல்கள் என்ன..தீயசெயல்கள் என்ன என்று பட்டியல் போடுகிறது. தீய செயல்களுக்கு மனம் வருந்துகிறது.மனிதனாக வாழ தவற விட்ட காலங்களை கனமாக்குகிறது. அவன் சந்தோஷம் என்று சேகரித்த அத்தனையும் அவனுக்கு பிறகு இன்னொருவனுக்கு உரிமையுடைதாக ஆகும் உண்மை புரிகிறது. உரிமை கொண்டாடிய உறவுகள் கூட அவனுடன் பயணிக்க போவதில்லை என்ற யதார்த்தம் தெரிகிறது. இப்போது 
உணர்கிறான் தன்னுடன் தனக்குள்ளே இருந்து தன்னை விட்டு விலகாமல்  கடைசி வரைகூடவே வரும் ஆன்மா பற்றி.அந்த ஆன்மா மனித வாழ்க்கையில் அன்பும், கருணையும் கொண்டு நல்ல செயல்களையே செய்திருந்தால் மனம் லேசாகி இறப்பு பற்றி கவலை கொள்ளாதவனாக ஆகிறான்.ஆன்மாவை உணர்தலே ஆன்மீகம்.ஒரு இடத்தை சென்றடைய பல்வேறுவழிகள் இருக்கும் உதாரணமாக சைக்கிள், இருசக்கரவாகனம், பேருந்து…   விமானம் ஏன் 
நடைப்பயணமாக கூட இருக்கலாம். இவை போலதான் ஆன்மாவை அடைய பல ஆன்மிக வழிகளை முன்னோர் உருவாக்கினர்.அந்த ஆன்மிக வழிகள் எல்லாமே நல்லசெயல்களை புண்ணியமாகவும்,     தீயசெயல்களை பாவமாகவும் எடுத்து காட்டியது. ஆன்மீக வழியை பின்பற்றியவர்கள் பழி, பாவங்களுக்கு அஞ்சி நற்செயல்கள் செய்வதையே வாழ்க்கையின் நோக்கமாககொண்டனர். நாளடைவில் அந்த ஆன்மிக வழிகள் இனம், மதம் என்ற 
வேறுபாட்டை பெரிதாக்கி ஒவ்வொருவரும்தன் வழிகள்தான் சிறந்தது என்று ஆன்மீகத்தின் நோக்கத்தையே திசை திருப்பியதால் மத வழிபாடுகளாக மாறிவிட்டது. இந்த வழிபாடுகளில் சிலர் எளிமையாக ஆன்மாவை உணர்ந்துகொண்டிருக்கின்றனர்..சிலர் வெறும் ஆரவாரங்களுடன் தன்ன போலியாக காட்டி கொண்டிருக்கின்றனர்.
   நிலையற்ற பொருட்களில் தன்னை தொலைக்காமல் ஆன்மாவை உணர்வதே ஆன்மீகம்.
ஆன்மிகம்னா எல்லாவற்றையும் துறந்துடறது இல்ல. நாம் போற பாதையில் ஒரு முள் இருந்தால் அதை எடுத்து யார் காலிலும் படாமல் எடுத்து ஓரமாக போடுவது கூட ஆன்மீகம்தான்! மற்றவர் துன்பம் அடையகூடாது என்று நினைக்கும் அந்த கருணை இறை நிலைதானே! இந்த இறை நிலையை ஒருமனிதன் தானாக உணர்ந்து செய்யும்போது அவனுக்கு ஆன்மீகம் தேவைப்படவில்லை.அவனை நாத்திகவாதி என்கிறோம்.போதனையால் உணர்ந்து செய்யும்போது ஆன்மீகம் தேவைப்படுகிறது.அவனை ஆத்திகவாதி என்கிறோம்.
 கலப்பட மனிதர்களால் நாத்திகமும் கூட ஆத்திகத்தை எதிர்த்து கொண்டிருப்பதுதான் அதன் வேலை என்ற நிலையை அடைந்து கொண்டிருக்கிறது.
இதற்கு மாற்று கருத்துக்கள் கூட இருக்கலாம்.எனவே என் கருத்துக்களை சரி, தவறுகளுக்கு கொண்டு போகவில்லை.
( இவ்வளவும் பேசிவிட்டு உண்மைய சொல்லனும்னா இப்ப நிறைய சம்பாதிக்கனும்னா ஒண்ணு அரசியல், இல்ல சாமியார்(ஆன்மீகம்) அப்படின்னு இல்ல ஆயிடுச்சி.. இதெற்கெல்லாம் காரணம் ஆன்மாவை உணராத பேராசை பிடித்த மனிதர்களாகத்தானே இருக்கமுடியும்.. அப்ப உண்மையான ஆன்மீகம் எங்கே.. ? )
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>






திருமணநாள் வாழ்த்து திரு .திருமதி தயாவரன் 03.06.15.

புத்தூரை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு .திருமதி .தயாவரன்( தயா சுசி) தம்பதிகளின் பதின் நான்காவது திருமணநாள் 03.06.2015.இன்று மிகவும் சிறப்பாக அவரது இல்லத்தில் நடை பெற்றது திருமண நாள் காணும்
 இவர்களை அன்பு அம்மா பிள்ளைகள்,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா
சித்தி உறவினர்கள் நன்பர்கள் மற்றும் இவர்களுடன்
 இணைந்து நவற்கிரி. இணையங்களும் http://lovithan.blogspot.ch/ நிலாவரை இணையங்களும்
உறவு இணையங்களும் ,புத்தூர் குருநாதர்- அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் அருள்பெற்று மிகுந்த சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோஷசீரும்சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்த நாள் வாழ்த்து திரு .தேவராசா சுதாகரன் 02.06.15.

யாழ்  இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :.தேவராசா சுதாகரன் (சுதா)அவரின்  பிறந்த நாள் இன்று. 02.06.2015 சூரிச்மாநிலத்தில் பிறந்த நாளை தனது இல்லத்தில்  சிறப்பாக குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றனர் .இவரை  அன்பு மனைவி மகள் மகன் அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி  தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  நல்லைகந்தன் இறைஅருள் பெற்று சகல செல்வங்களும் பெற்று; சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
                    நவக்கிரி .http://lovithan.blogspot.ch
                                   நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
நவக்கிரி கொம் . இணையங்களும்  வாழ்த்துகின்றனர்
உன் அம்மா வின்  
அழகு முத்தாரம்! 
தவமிருந்து பெற்றுக்கொண்ட 
அமுதக் கிண்ணம்!
உன் அன்னையின் துயரம் நீக்கிய 
குட்டி அரசன்! 
உன் அம்மாவின் சுமை தாங்கிய 
சுட்டிக் கடைக்குட்டி!
இச்சிறு வயதில் உன் 
பண்பிலும்,சிக்கனத்திலும் 
என்னை நீ வியக்க வைக்கிறாய்!
உன் அதிரடிப் பேச்சில் 
பயந்து தான் போகிறேன் நான்! 
உன் பொறுப்பினைக் கண்டு 
பூரித்து தான் போகிறேன் நான்!
கல்லூரி முடிந்து வரும் வேளையில்உன்  
களைப்பை ஆற்றிட நீ தரும் தேநீர் 
உன் அம்மா 
கரும்பினும் இனிமையாகும் 
அம்மாவின் அன்பு  
உன் பாசத்தினாலே!
மனமுடைந்து போகும் வேளையில் 
மனதிற்கு இதமான உன் பேச்சு 
நம்பிக்கை ஊட்டிடும் நல் மருந்து எனக்கு!
என் உடல் நலனிலும் 
உடையிலும் அக்கறை காட்டும் 
இன்னொரு அம்மா  நீ!
உன் பாசத்தினை வெளிப்படுத்தத் 
தெரியா குட்டி ராட்சசன் நீ! 
அன்பினால் உன் வீட்டை ஆளும் 
இளவரசன்  நீ!
உன் வளம்  சிறக்க 
உடல் உள நலமுடன் வாழ்ந்திட 
இறைவனை வேண்டுகிறேன்! 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்




பிறந்தநாள் வாழ்த்து திரு .சுப்பிரமணியம் தர்மதேவன் (30.05.15)

நவக்கிரியை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலில்  வசிக்கும் திரு சுப்பிரமணியம் தர்மதேவன் 
  தனது  பிறந்த தினத்தை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு விமர்சையாக இன்று 30.05.2015 கொண்டாடுகிறார்.இவரை அன்பு  அம்மா   மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் மைத்துனர்கள் மாமா மாமி   மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா  மார் மச்சான் மச்சாள் மார்   மருமகள் பேத்தி  பேரன் மார்  மற்றும் உறவினர்கள்  இவரை   நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் ஆசியுடன்சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோஷ மாக 
பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன :
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


Powered by Blogger.