| திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் வரும் பக்தர்களைக் கணக்கிட நவீன இயந்திரம் பொருத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
|
ஏற்கனவே கோவிலில் பக்தர்களைக் கண்காணிக்க கண்காணிப்பு கமராக்கள்
பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்களை கணக்கிட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரம் பொருத்தப்படவுள்ளது. பக்தர்களின் வருகையை அதிகாரிகள் தவறுதலாக குறிப்பிடுவதாகவும் இதனால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதாகவும் இதனை தவிர்க்கவே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேவஸ்தான அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார். இவ்இயந்திரம் ஏழுமலையானைத் தரிசனம் செய்யும் வரிசை, அன்னதான பிரசாத வரிசை, முடி காணிக்கை வரிசைகளில் பொருத்தப்பட உள்ளது |
திருப்பதியில் ஏழுமலையானைத் தரிசிக்கும் பக்தர்களைக்.
Tags :
செய்திகள்
காஞ்சி கோவில்களுக்கு எப்போது கும்பாபிஷேகம் நடக்கும்?
காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களின் பின்னணியில், பல வரலாற்று தகவல்கள் புதைந்து கிடக்கின்றன. இங்குள்ள சிலைகள், மண்டபங்கள், தூண்கள் என அனைத்துமே, பல்லவ, சோழ, பாண்டிய என, காஞ்சியை ஆண்ட பல மன்னர்களால் எடுப்பிக்கப்பட்டவை. இந்த சிலைகளும், மண்டபங்களும், தமிழர் தம் பழம் பெருமையை, இன்றளவும் பறைசாற்றிக் கொண்டுள்ளன. கைலாசநாதர் கோவில், கலை பொக்கிஷமாக திகழ்கிறது. இது, உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரதராஜப் பெருமாள் கோவில் நூறு கால் மண்டபத்தில், தசாவதாரங்கள் வரலாறு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட சங்கிலி, உருளும் தூண், போன்றவை இன்றும் காண்போரை வியக்க வைக்கிறது. அழியா ஓவியம் வரதராஜப் பெருமாள் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், கைலாசநாதர் கோவில், திருப்பருத்திக்குன்றம் ஜைனர் கோவில், ஆகியவற்றில் மூலிகைகளைக் கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் உள்ளன. இத்தகைய சிறப்புகளைப் பெற்ற கோவில்களில் உள்ள சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள், மக்களை கவரும் வண்ணம் உள்ளன. கி.பி. 1249ல், காகதீய இளவரசி கனகாம்பா, ஏகம்பன் கோவிலில் தூண் எழுப்பியுள்ளாள். சம்புவராயர்களின் ஆட்சியில், ஏகம்பரநாதன், இக்கோவிலில் கோபுரம், துலாபார மண்டபம் கட்டியதுடன், தேரும் அளித்துள்ளான்.
இம்மன்னனால் எழுப்பப்பட்ட கோபுரம், இன்றும் "பள்ளி கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. சோழர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கால் மண்டபம், விஜயநகர வேந்தர்களால் ஆயிரம் கால் மண்டபமாக மாற்றப்பட்டது. கி.பி.1509ல், கிருஷ்ண தேவராயன், ஏகம்பன் கோவிலின் தெற்கு கோபுரத்தை அமைத்து, 1517ல், தெப்போற்சவமும் நடத்த ஏற்பாடு செய்துள்ளான். வண்ண ஓவியங்கள் ராஜசிம்ம பல்லவனால், கயிலாயநாதர் ஆலயம் எடுப்பிக்கப்பட்டது. கி.பி. 1365ல், குமார கும்பண்ணன் காலத்தில், வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டன. இதன் மூலம், கோவில் மேலும் பொலிவடைந்தது. காஞ்சி, காமாட்சியம்மன் கோவில் விமானத்தை, கி.பி.1394ல், இரண்டாம் புக்கன் செப்பு கவசமிட்டு, அலங்கரித்துள்ளான். கி.பி.1449ல், இக்கோவிலில், மல்லிகார்ஜுனன் 16 கால் மண்டபத்தை எழுப்பியுள்ளான். முதலாம் குலோத்துங்கன் ஆட்சியில், இம்மன்னனின் படைத்தளபதியான நரலோக வீரன், வரதராஜபெருமாள் கோவிலில் மடப்பள்ளி, மண்டபம், பிரகார சுற்றுச்சுவர் எழுப்பி, அதில், அரியின் சிற்பத்தை இடம் பெற செய்துள்ளான். பராமரிப்பு இல்லை இந்த வரலாற்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. காஞ்சிபுரம் நகரில் உள்ள கோவில்களில், காலத்தால் அழிக்க முடியாத கலை பொக்கிஷங்கள் உள்ளன. ஆனால், அவை போதிய அளவில் பராமரிக்கப்படுவதில்லை என்பது தான் சோகம். பல சிற்பங்கள் தூசிகளாலும், எண்ணெய் பிசுக்காலும் மறைக்கப்பட்டுவிட்டன என்பதே உண்மை. பெரும்பாலும் இருளில் மூழ்கி கிடக்கும் இந்த கலைப் படைப்புக்கள், அங்கு வருவோரின் கண்களுக்கு தெரிவதில்லை. இவற்றை அறிந்து கொள்ள தகவல் பலகையோ, அடையாள குறியோ எதுவும் கிடையாது. எனவே, கோவிலுக்கு வரும் பக்தர்களும் சரி, சுற்றுலா பயணிகளும் சரி, சுவாமி தரிசனத்தோடு சென்றுவிடுகின்றனர். காணக்கிடைக்காத கலை பொக்கிஷங்களை அவர்கள் கவனிப்பதில்லை. உயிரோட்டம் தேவை பொதுவாக ஒரு கோவிலுக்கு, ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அப்போது தான், அந்த கோவிலில் மூலவரை வழிபடும் பலன் முழுமையாக கிடைக்கும் என்பது நம்பிக்கை என்றாலும், குறைந்த பட்சம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது, வரலாற்று சிற்பங்கள் புதுப்பிக்கப்படும் என்பது, கும்பாபிஷேகத்தின் முக்கிய பயனாகும். தற்போது நகரத்தில், ஒரு சில கோவில்களை தவிர பெரும்பாலான கோவில்களில் 20 ஆண்டுகள் கடந்தும், கும்பாபிஷேகங்கள் நடத்தப் படவில்லை. இதனால், கோவில்களில் உள்ள சிற்பங்களும், மண்டபங்களும் உயிரோட்டம் இன்றி, பொலிவிழந்து காணப்படுகின்றன. எனவே, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், சிற்பங்களை மூலிகை ரசாயனம் கொண்டு பொலிவு பெற செய்யவும், கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. செய்வார்களா?

ஆலய நிகழ்வுகள்
சீர்காழி சிவசிதம்பரம் பாடலில் ஒலிக்கும்
தினமணி - தில்லி பதிப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் சீர்காழி சிவசிதம்பரம் தினமணி குறித்து பாடிய பாடல்!
Tags :
காணொளி
மகா தீப கொப்பரைக்கு இன்று சிறப்பு பூஜை
திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்பட்டு, தொடர்ந்து 11 நாள்கள் எரிந்த மகா தீபம் சனிக்கிழமை அதிகாலையுடன் நிறைவு பெறுகிறது.
இதையொட்டி, மகா தீபம் எரிய பயன்படுத்தப்பட்ட கொப்பரைக்கு கோயிலில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
பஞ்சபூத ஸ்தலங்களில், அக்னி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா, நவம்பர் 18ஆம் தேதி தொடங்கியது. 27ஆம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் தொடர்ந்து, 11 நாள்கள் எரிந்தது.
திருவண்ணாமலையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பிரகாசிக்கும் திறன் கொண்ட இந்த மகா தீபம், சனிக்கிழமை அதிகாலையுடன் நிறைவு பெறுகிறது. பின்னர், மகா தீப கொப்பரை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு வரப்படுகிறது. கோயிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் மகா தீபக் கொப்பரையை வைத்து சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் அ.தி.பரஞ்சோதி, மேலாளர் இந்திரஜித், கண்காணிப்பாளர்கள் துவாரகநாத், வடிவேல் ஆகியோர் செய்து வருகின்றனர்

இறைவனை நேருக்குநேர் நின்று வணங்கலாமா?
இறைவனுக்கு மூன்று கண்கள். இவற்றில் நெற்றிக்கண் நெருப்பு வடிவமானது. இந்த பார்வை நன்மை அளிக்காது. மற்றைய இரு கண்கள் சூரியசந்திர வடிவமானவை. இவை நன்மை பயக்கக்கூடியவை. தெய்வத்தின் கடைக்கண் பார்வை தான் நமக்கு வேண்டும். இதைத் தான் கடாக்ஷம் என்பர். கட என்றால் கடைசி. அக்ஷம் என்றால் கண். அதாவது, கடைக்கண் பார்வை. இது கருணையே வடிவமானது. சகல ஐஸ்வர்யங்களையும் தர வல்லது. அதற்காகத்தான் நேருக்குநேர் நின்று தரிசிக்காமல் பக்கமாக நின்று வழிபட வேண்டும்
Tags :
ஆன்மிகம்
தமிழர் பண்பாடுஉணவு பரிமாறும்?
தமிழர் பண்பாடு
தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்
1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
...

5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்
பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும்

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்,;;;;;;;;
இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார்...
கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது.
இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்ததுடன், பெருமளவு வருவாயும் கிடைத்துவந்தது. பெருமளவு ஆள்பலமும், அரசனின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும், இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது.
இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகின்றது

இந்து ஆலயங்கள்
இணையத்துக்கும் இணைய நிர்வாகத்துக்கும் கௌரவிப்பு
சிறுப்பிட்டி{ நெற்} இணையத்துக்கு இணையநிர்வாகி விமலுக்கு கௌரவிப்பு இது மகிழ்வான செய்தி ஊடகத்துறையை நேசித்த விமலுக்குமட்டு மல்ல சிறுப்பிட்டி ஊருக்கே கிடைத்த கௌரவமாக நினைக்கிறோம் தாயை நேசிப்பவன் தன் மண்ணை நேசிப்பான் தன் ஊருக்காய் ஏதாவது செய்ய சிந்திப்பான் ஆனால் எமது ஊருக்காய் புலத்தில் பூத்த நிலவாய் பூத்த ஊடகமே சிறுப்பிட்டி இணையம் இப்படி ஒரு நல்ல சாதனையை புரிந்து யேர்மனியில் உள்ள சுவெற்றா கனகதுக்கை ஆலயத்துக்கும் ஊடகம் சார்ந்த பணி புரிந்த சிறுப்பிட்டி இணைய நிர்வாகி ஊடகப் பணியை ஒழுங்குற செய்தது அவருக்கு மட்டுமல்ல சிறுப்பிட்டி வாழ் உறவுகள் அனைவருக்கும் கிடைத்த மகிழ்வாகும் நான் நினைக்கிறேன்{காணொளி,}
நாங்கள் அறிந்த மட்டில்சிறுப்பிட்டி ஊரின் இணைய ஊடகத்தின் முதல்வனும் விமல்தான் என்று அதனால் அவருக்கான கௌரவம் கிடைக்கப்பட வேண்டிய ஒன்று தான் அவர்பணி தொடர வாழ்த்துவதோடு இன்று போல் என்றும் நல்லதுக்காய் செயலாற்றி இணையப்பந்தில் இணைவோருக்கு நல்லதைச் சொல்லும் ஊடகமாய்த் தனித்துவம் கொண்டு வலம் வரப்பாரினில் வீரத்தொலி விழிகளை பார்த்திடவைத்திடும் இது தன் வீச்சோடு இணைந்து பணியாற்றிடும் என்பது உணர்வு உள்ளவருக்குத்தெரியும் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசாவும் விமலின் கை வண்ணத்தில் உருவா க்க பட்ட உறவு இணையங்களும்அன்புடன் வாழ்த்துகின்றது
Tags :
காணொளி
Powered by Blogger.