நல்லைக் கந்தனின் 18ம் திருவிழாக் காட்சிகள்!

   வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் 18ஆம் திருவிழாவான நேற்றுமாலை முருகப்பெருமான் வள்ளி - தெய்வயானையுடன் வெளி வீதியுலா வந்த காட்சிகள்.

இங்குஅழுத்தவும் முக்கிய நிழல் படங்கள் இணைப்பு

 

பிறந்தநாள் வாழ்த்து :ஜெகதாசன் செந்துஜா,18.08..14


  பிறந்தநாள்  நாள் இன்று  18.08. 2014. ஜெகதாசன் செந்துஜா பிறந்தநாள் பிறந்த நாளை மிகவும்சிறப்பாக  தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.
 இவரை  அன்பு கணவர் அம்மா  மாமா குடும்பத்தினர் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி  குடும்பத்தினர் சகோதரர்கள் மச்சன் மச்சாள்  மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள்.இவர்களுடன் இணைந்து.  இந்தஇணையங்களும் ,இறைஅருள் பெற்று சகல செல்வங்களும்பெற்று பல்லாண்டுகாலம் நீடுழி   சீரும் சிறப்புடன்  வாழ்க வாழ்க வென  வாழ்த்துகின்றோம் ,
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

நடைபெற்ற சூரிச் முருகன் ஆலாய தீர்த்தோற்சவசம்(நிழல் படங்கள்)

மிகவும் சிறப்பாகவும் நடைபெற்ற.17.08.14. சுவிற்ஸர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் அட்லிஸ்வில் என்னும் கிராமத்தில் அருள் பாலித்து அமைந்திருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமனிய சுவாமி ஆலய வருடாந்த தீர்த்தோற்சவச திருவிழா பெரும் பக்தர்கள் வெள்ளத்துடன் மிகவும் சிறப்பாகவும்,பக்தி மயத்துடனும் நடைபெற்றது.எம்பெருமான் எளுந்தருளி ஆலயத்தின் முன் உள்ள ஆற்றில் நீராடி அபிசேக ஆராதனைகளுடன் வீதி உலாவந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார். முருகன் அடியவர்கள் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்டு எம்பெருமான் முருகன் அருளை பெற்று சிறப்பித்து கொண்டனர் .
இங்குஅழுத்தவும் முக்கிய நிழல் படங்கள் இணைப்பு
 

சூரிச் முருகன் ஆலாய தேர்திருவிழா (நிழல் படங்கள் இணைப்பு )






இன்று .16.08.14.மிகவும்  சிறப்புடன் நடைபெற்ற சுவிற்ஸர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் அட்லிஸ்வில் என்னும் கிராமத்தில் அருள் பாலித்து அமைந்திருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமனிய சுவாமி அலய வருடாந்த மகேற்சுவ தேர்திருவிழா  நடைபெற்றது.

கொட்டும் மழையிலும், நடுங்கும் குளிரிலும் எம்பெருமான் எழுந்தருளி தேர் ஏறி பவனிவர. அடியவர்கள் புடை சூழ  தமது நேர்த்திகடன்  நேர்ந்தவர்கள் எம்பெருமான் முன்னும் பின்னும் தம் நேர்த்திக்கடன்களை  நிறைவேற்ற  காவடிகள்.  கற்ப்பூரச்சட்டிகள், எடுத்துச்  சூழவர எம்பெருமான்

எழுந்தருளி வீதி உலாவந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.

இத்திருவிழாவில் பெருந்திரலான சுவிற்ஸர்லாந்தின் பல பாகங்களில்  இருந்தும் பல்லாயிரகனக்கான   முருகன் அடியவர்கள் கலந்துகொண்டு எம்பெருமான்  முருகன் அருளை பெற்று சிறப்பித்து கொண்டனர்.








இங்கு அழுத்தவும் முக்கிய நிழல் படங்கள் இணைப்பு

murukan8

ஆன்மிகம் என்றால் என்ன? பகுதி 2

    ஆன்மிக தேடலில் மூழ்கி முத்தெடுக்கத் துடிக்கும் எமது அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் உங்கள் சக பயணியான இந்த ஆன்மிக நண்பனின் வாழ்த்துக்கள் . மிகவும் வேகமாக வளர்ந்து (!) வரும் அறிவியலின் வளர்ச்சி காரணமாக இன்று பழமைகள் புறந்தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆன்மிகம்
 
 என்பது வெறுமனே கோவில்களுக்கு அல்லது ஜீவ சமாதிகளுக்கு செல்வது , பத்து ரூபாய் செலவு செய்து பலகோடி ரூபாய்க்கு அதிபதியாக வேண்டுமென இறைவனிடம் அல்லது சித்தரிடம் (சிலையிடம் !!) கோரிக்கை வைப்பது என்று மிகவும் வெளிமுகமாக , சுற்றுலா சென்று வருவதைப் போல் தான் ஆன்மிகம் உள்ளது . இன்னும் சிலரோ தாங்கள் ஆன்மிக வாதிகள் என்று உலகுக்கு அறிவிக்கும்
 
வண்ணம் புற அடையாளங்களை செய்து புகழ் மற்றும் பணம் கிடைக்க மிக நல்ல வழியாக ஆன்மிகத்தை வளர்க்கின்றனர்(!!.) தாங்கள் கோவில் கோவிலாக செல்வதையும் , அந்த கோவிலில் எனக்கு இந்த மாதிரியான அதிர்வுகள் தோன்றின, இந்த கோவிலில் எனக்கு அந்த மாதிரியான அதிர்வுகள் தோன்றின , எனக்கு இறைவனும் இறைதன்மையும் புரிபட்டு விட்டது , என்று சிலர் கூசாமல் பிறர் தம்மை புகழ வேண்டும், மரியாதை செலுத்த வேண்டும் என நினைக்கின்றனர் . சரி .. உண்மையான ஆன்மிகம் என்பது என்ன ...?
 

மஞ்சத்தில் உலா வந்த நல்லைக் கந்தன்!

10ம் திருவிழா காட்சிகள் 
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் 10ஆம் நாள் திருவிழாவான நேற்றுமாலை, முருகப் பெருமான், வள்ளி -தெய்வயானையுடன் மஞ்சத்தில் வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 
 
                                      
 
 

யேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய தேர் 03.08.2014

யேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய தேர் 03.08.2014 சிறப்பாக நடந்தேறியது.

ஆலயத்தின் வளர்ச்சி என்பது நிர்வாகம் அத்தோடு ஆலயத்தின் குருக்களிடமேயும் தங்கி உள்ளது . அந்தச் சிறப்புக்கள் எல்லாவற்றையும் ஒன்று கூட்டி ஐெயந்தி நாதசர்மா அவர்கள் சிரித்த முகத்தார் தெய்வம் குடிகொண்ட நெஞ்சுடையார் மலர்முகத்தார் இவர்பணியால் அம்மன் மேல் கொண்டபக்தியால் ஆலயத்துக்கு வருடா வருடம் மக்கள் தொகை கூடிநிற்க அவர் பிள்ளைகள் தெய்வத்தை அலங்கரிக்க ஆதரிக்க ஆலய நிர்வாகம் இணைந்த துர்க்கை அடியார்கள் துணையால் இத்தனை சிறப்புற்ற அம்மனின் தேர் வீதி உலா கண்காட்சி சிறப்புற்றுள்ளது .

அம்மனின் தேரிலே அவள்பணிசெய்பக்தர் ஐெயந்தி நாதசர்மா அவள் அடியில் சரண் புகுந்தார் ஐெயந்தி நாதசர்மா

சிரித்து மகிழ்ந்த முகத்துடனே

அவள் சிறப்புக்காக இவர் உழைத்து

சிந்தையில் அவள் நினைவு

செல்லப்பிள்ளை இவர் அவள்

அவர் செய்யும் சேவையதனால்
அன்னை மகிழ்ந்து புன்சிரிப்பில்
 கருணையுள்ள முகத்தழகன்
 க‌டமையவள் துதி அயன்
 பெருமை அற்ற அவள் பக்தன்
 பேரின்பத் தால்பக்தன்

புலம் அமர்ந்த துர்க்கை அம்மன்
 புதுமை கொள்ளும் சுவெற்றா அம்மன்
 கருணைவேண்டி செல்லும்பக்தர்
 கனிவு கொள்ளும் ஸ்ரீ கனகதுர்க்கா
 வேண்டிட வேண்டிட வரம் அருள்வாள்
 வேதனை ‌ தீர்த்து இங்கு அவள் அருள்வாள்
 
இங்குஅழுத்தவும் தேரின் நிழல்படங்களை இங்கே இணைக்கிறோம்

ஏழாம் திருவிழா காராம்பசு வாகனத்தில் வலம் வந்த நல்லைக் கந்தன்!


nalk4
   வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில், வருடாந்த மஹோற்சவத்தின், ஏழாம் திருவிழா, இன்று இடம்பெற்றது. இன்று மாலை முருகப்பெருமான் காராம்பசு வாகனத்தில் எழுந்தருளி, வெளிவிதீயுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏழாம் திருவிழாக் காட்சிகள்.
இங்குஅழுத்தவும் புகைப்படங்கள் மற்றைய செய்திகள்

நல்லவன் எனப் பெயரெடு!


pillaiyar
மனிதன் எந்த நிலையில் எந்த இடத்தில் இருந்தாலும் இறைவனின் கல்யாண குணங்களைக் கேட்பதை, தன் வாழ் நாளின் லட்சியமாகக் கொள்ள வேண்டும். * சத்தியம் என்றால் வாக்கும் மனமும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை வாக்கில் கூறுவதே சத்தியம். அது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். * முதலில் வேண்டியது வெளி அடக்கம். வெளி அடக்கமே மனதில் உள்அடக்கத்தை உண்டு பண்ணும். மனம் அடங்கும் போது ஞானம் தலைகாட்டும். * எடுத்துச் சொல்வதைவிட, எடுத்துக்காட்டாக இருப்பது சிறப்பு. பார்த்த அளவிலேயே நல்ல மனிதர் என்று கூறும்படியாக நம் வாழ்க்கை நடைமுறை இருக்க வேண்டும். * கோபத்தால் நமக்கு நாமே தீங்கு செய்து கொள்கிறோம். கோபம் என்பது நல்வழியிலிருந்து திசை திருப்பி நம்மை அழிவுப்பாதைக்கு அழைத்து சென்றுவிடும். * குடும்ப கடமைகளை விட்டு வெளியே வந்து சேவை செய்ய வேண்டியதில்லை, குடும்பத்தையும் பார்த்துக் கொண்டே சமூகசேவையும் சேர்த்து செய்வதே சரியானது. -காஞ்சிப்பெரியவர்
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்
Powered by Blogger.